சென்னையில் ரஹ்மத் அறக்கட்டளையின் நபிகளாரின் பொன்மொழிகள் நூல் வெளியீடு
சென்னையில் ரஹ்மத் அறக்கட்டளையின் சார்பில் நபிகளாரின் பொன்மொழிகள் சுனனுந் நஸாயீ ( பாகம் ஒன்று ) வெளியீட்டு விழா 04 ஜுலை 2009 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ஃபைஸ் மஹாலில் வெளியிடர்கள்
அல்ஹம்து லில்லாஹ் நல்ல செய்தி.
ReplyDeleteஇது போல அபூதாவூத், இப்னு மாஜா, அகமத் போன்ற நபிமொழி நூல்கள் வெளிவர வேண்டும்.சகோதரர் தமீம் இது போன்ற பணிகளில் மிகுந்த ஆர்வமுள்ளவர். புகாரி முஸ்லிம் போன்ற நூல்கள் வெளிவர முதன்மைக் காரணமாக இருந்தவரும் அவர்தான் என்பது பலர் அறியாத வரலாறு. தூய இஸ்லாம் அதன் யதார்த்த நிலையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் ரஹமத் அம்மா பெற்ற பிள்ளைகளில் இவரளவுக்கு இவரது உடன்பிறப்புகள் இல்லை என்பதையும் நான் அறிவேன். இவற்றையெல்லாம் முகப்புகழ்ச்சிக்காக நான் தெரிவிக்கவில்லை. சொல்லப்போனால் நான் யார் என்றே அவர்கள் யாருக்கும் தெரியாது. ரஹமத் அறக்கட்டளை நிறுவனத்தார்களே உங்கள் பணி தொடரட்டும். அகமது நபிமொழி நூல் சமீபத்தில் வெளிவரப் போவதாக கேள்விப்பட்டேன். அருமையன நூல். சீக்கிரமாக சீரிய முறையில் வெளிவரட்டும். வாழ்த்துக்கள்.