Friday, May 29, 2009

முத்து பேட்டையில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்

முத்து பேட்டை
முத்து பேட்டையில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்

என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?
நாள் : மே 30 - சனி கிழமை- (இன்ஷா அல்லாஹ் )
நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை
சிறப்புரை : J.முஹமது தஸ்தகீர். B.E.
இடம் : TNTJ மர்கஸ், நூர் பள்ளிவாசல் தெரு, முத்து பேட்டை, திருவாரூர் மாவட்டம்
தொடர்பிற்கு : 9094283904
மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ. திருவாரூர் மாவட்ட மாணவர் அணி.

Wednesday, May 20, 2009

முத்துப்பேட்டை அமீரகப் பேரவை

முத்துப்பேட்டை அமீரகப்பேரவை

வல்ல இறைவனின் அளவற்ற அருளால் மகிழ்கிறது… முத்துப்பேட்டை. தனிச்சிறப்புடன் பெருமை பெறுகிறது… அமீரகப்பேரவை !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மத்துல்லாஹ்…)
இந்திய திருநாட்டின் 15ஆம் மக்களவைப்பொதுத்தேர்தலில்;, வேலு}ர் நாடாளுமன்ற தொகுதியில் மகத்தான வெற்றி பெற்ற நமது முத்துப்பேட்டை அமீரகப்பேரவையின் புரவலர் நமது அன்பிற்கும் தனி மதிப்பிற்கும் உரிய சகோதரர் N.M.அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு எங்களின் துஆக்களுடன் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

16.5.2009 அன்று வெற்றி வாகை சூடிய அமீரகப்பேரவையின் புரவலருக்கு, மூத்த புரவலர் அல்ஹாஜ் M.N.ஜக்கரியா அவர்கள், வேலுரில் நல் துஆக்களுடன் பொன்னாடை போர்த்தி, மூத்த புரவலர் அல்ஹாஜ் M.A.முஸ்தபா அவர்கள் அக மகிழ்ந்து மன நிறைவான துஆக்களுடன் தமது வாழ்த்துக்களை தொலைபேசியில் தெரிவித்து வேலு}ர் மாநகரத்தில் வலம் வர வழியனுப்பி வைத்ததையும் மனமகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
எல்லாம் வல்ல இறைவனே! அமீரகப்பேரவையின் வெற்றிகரமான ஐந்தாம் ஆண்டின் நிறைவில் மாபெரும் வெற்றியைத்தந்தவனே அனைத்துப்புகழும் உனக்கே உரித்தாகுக.
மன நிறைவான நல் வாழ்த்துக்களுடன்,


நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர்கள்

முத்துபேட்டை அமீரகப்பேரவை ( MEF) துபாய்
ஐக்கிய அரபு அமீரகம்

Tuesday, May 19, 2009

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச்சங்கம் ( மிவா) நடத்தும் இரண்டாம் ஆண்டு குர் ஆன் மனனப் போட்டி மற்றும் ஹத்தன முகாம்

தேதி : 06.06.2009

இடம் : கொய்யா திருமண மஹால், முத்துப்பேட்டை

அன்புடயீர்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்....)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் இரண்டாம் ஆண்டு குர் ஆன் மனனப் போட்டி மற்றும் ஹத்தன முகாம் இன்சா அல்லாஹ் வரும் 30.05.2009 ம் தேதி சனிக்கிழமை கொய்யா திருமண மஹாலில் நடைபெற உள்ளது. அது சமயம் வெளியூரில் இருந்து மார்க்க அறிஞர்களும் மற்றும் ஆலிமாக்களும் பெண்களுக்கான சிறப்பு இஸ்லாமிய செற்ப்பொழிவுகளும் நிகழ்த்திட உள்ளனர், இஸ்லாமிய சமுதாயத்தினர் அனைவரும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேம்.

நமது சங்க உறுப்பினர்கள் மற்றூம் நமது ஊர்வாசிகள் அனைவரும் தங்களையும் இனைத்து கொள்ளூமாறு கேட்டுக்கொள்கிறேம், மேலும் இது போல் நற்காரியங்களுக்கு தங்களுடய பொருளாதாரத்தை தாரளமாக கொடுத்து பயன் அடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேம்

இப்படிக்கு

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச்சங்கம் ( MIWA )
அமிரக கமிட்டி

Monday, May 18, 2009

அப்துல் ரஹ்மான் தாய்ச்சபையினருக்கு நன்றி தெரிவித்து உணர்ச்சிகரமான உரை

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் தாய்ச்சபையினருக்கு நன்றி தெரிவித்து உணர்ச்சிகரமான உரை

வேலூரில் வெற்றி மாலை சூடிய அப்துல் ரஹ்மானுக்கு தாய்ச்சபை யாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில தலைமை அலுவலகமான காயிதெ மில்லத் மன்ஸிலில் சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட்டது.

முஸ்லிம் லீகின் மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும் மற்றும் ஊழியர்களும், தலைமை நிலைய அலுவலர்களும், மணிச்சுடர் நாளிதழ் செய்திப்பிரிவு - அச்சகப் பிரிவு ஊழியர்களும் பொன்னாடை அணி வித்தும் கைகுலுக்கியும் தங்களது வரவேற்பையும், வாழ்த்துக் களையும் தெரிவித்துக் கொண்டனர்.

வரவேற்பையும், வாழ்த் தையும் ஏற்றுக் கொண்ட வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் தனது வெற்றிக் காக பாடுபட்ட தாய்ச்சபை யினருக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவித்து உணர்ச்சிகர மான உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறிய தாவது-

தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்த ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வேலூர் தொகுதி ஒதுக்கப் பட்டு அதன் வேட்பாள ராக போட்டியிடும் வாய்ப் பினை வழங்கிய இறைவ னுக்கு முதலில் என் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். எனது இளமைக்காலத் திலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஊழியனா கவே பணியாற்றி பழக்கப் பட்டவன். முஸ்லிம் லீக் காரனாகவே வாழ்க்கையை நடத்திச் செல்லும் அளவுக்கு தாய்ச்சபை தலைவர்கள் என்னை பக்கு வப்படுத்தியுள்ளார்கள் - வழிகாட்டிக் கொண்டிருக் கிறார்கள். தாய்ச்சபை தலைவர்கள் வழியிலிருந்து சிறிதளவும் பிசகாமல் நடப்பதன் காரணமாகவே எந்தவித தவறுக்கும் இடமளிக்காத வண்ணம் எனது வாழ்க் கையை நடத்திச் செல்ல முடிகிறது. பதவியை - பட் டங்களை - அதிகாரங் களை விரும்பி நான் தாய்ச் சபைக்கு வந்தவன் அல்ல. நான் பிறவியிலேயே முஸ்லிம் லீக் காரன். பதவி கள் எனக்கு பெரிதல்ல. சமு தாயத்தின் மானம் - மரி யாதை - கண்ணியம் ஆகி யவைதான் எனக்கு முக்கிய மானவையாகும்.

தாய்ச்சபை காட்டிய வழியிலிருந்து எந்த நிலை யிலும் நான் தவறி விட மாட்டேன் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட் டுள்ளேன்.

இலக்கியங்களிலே சொல்லப்படுவதைப் போல எள் அளவும் எள்ளின் முனை அளவும், முனையின் நுனி அளவும், நுனியின் அணு அளவும் தாய்ச்சபையின் கண்ணி யத்தை குறைக்கும் வகை யில் எனது செயல்பாடுகள் அமைந்து விடாது என் பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். வேலூர் நாடாளு மன்ற தொகுதியின் வேட்பாள ராக அறிவிக்கப்பட்டு, அந்த தொகுதியில் கால் வைத்தது முதல் வெற்றி பெற்று இன்று உங்களை யெல்லாம் மகிழ்ச்சியுடன் சந்திக்கும் இந்த நொடி வரையிலும் எனது வெற்றிக்காக பலரும் பல விதங்களில் சிறப்பாக பணி யாற்றியுள்ளார்கள். அவர் களையெல்லாம் நன்றி பெருக்குடன் நினைத்துப் பார்க்க கடமைப்பட்டுள் ளேன்.

நான் வேலூர் வேட்பா ளராக நிறுத்தப்பட்டேன் என்றால் தனிப்பட்ட அப்துல் ரஹ்மான் நிற்கிறார் என்று கருதாமல் தாய்ச்சபையின் ஊழியர் நிற்கிறார். சமுதாயத்தின் கண்ணியம் காக்க உரிமை களை வென்றெடுக்க தாய்ச் சபை நிற்கிறது என்ற உணர்வுடன் ஒவ்வொருவ ரும் தாங்களே வேட்பாள ராக நிற்பது போல் எண்ணி தங்கள் வெற்றிக்கு எப்படி யெல்லாம் பாடுபடுவோர் களோ, எவ்வாறெல்லாம் உழைப்பார்களோ அவ்வ ளவு தீவிரமாக களப் பணி யாற்றி வெற்றியை ஹனீப், ஜான் பாஷா, குல்ஸர், அய்யூப், வாணியம் பாடி சட்டமன்ற உறுப்பி னர் அப்துல் பாஸித், பாரூக் ஹாஜியார் இன்னும் ஏராளமானோர் பாடுபட்டுள்ளீர்கள்.

தலைமை நிலையச் செயலாளர் அபுபக்கர், இப்ராஹீம் மக்கி, காயல் மஹபூப், கமுதி பஷீர், ஹமீதுர் ரஹ்மான், மில்லத் இஸ்மாயில், திருச்சி ஹாஷிம், முஸ்லிம் லீக் பாடகர் சீனி முஹம்மது உள்ளிட்ட ஏராளமா னோர் வேலூரிலே முகா மிட்டு எனது வெற்றிக்காக பிரசாரம் செய்துள்ளார் கள். கடமையாக உழைத் துள்ளார்கள்.

உள் நாட்டில் மட்டும் அல்லாமல் அயல் நாட்டில் நான் பணிபுரிந்த போதும் தாய்ச்சபையின் பணிகளில் - வளர்ச்சியில் பங்கெடுத்து வந்துள்ளேன். என்னுடன் சர்வதேச காயிதெ மில்லத் பேரவையின் பணிகளில் பங்கேற்று உழைத்த லியா கத் அலியும் வேலூரில் எனது வெற்றிக்காக உழைத்துள்ளார்கள். அவர் தான் சட்டமன்றம், நாடாளுமன்றம் உள் ளிட்ட மக்கள் மன்றத்தில் என்னுடைய பணி அமைய வேண்டும் என பெரிதும் ஆர்வம் கொண்டு ஊக்கப் படுத்தி வந்தார்.

நான் வெற்றி பெற்ற வேலூர் தொகுதி நமது தாய்ச்சபை தலைவர் சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் நின்ற தொகுதி - வென்ற தொகுதி. அந்த தொகுதியில் நானும் ஒருவனாக போட்டியிடும் வாய்ப்பினை பெற்றதும் பிரசாரத்திற்காக அந்த தொகுதியின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் போது சிராஜுல் மில்லத் அவர்கள் குறித்த பாராட் டுரைகளையும், சிறப்பான விமர்சனங்களையும் நினை வூட்டல்களையும் பெற முடிந்தது. அதேபோன்று நம்மை வழிநடத்திக்கொண்டிருக் கும் தாய்ச்சபையின் தற் போதைய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரி யர் நின்ற தொகுதி - வென்ற தொகுதி. இந்த தொகுதியில் மீண்டும் தாய்ச்சபை வென் றுள்ளது.

தொகுதி வேட்பாள ராக பிரசாரத்திற்கு நான் சென்ற போது வாணியம் பாடி தொகுதியின் முக்கிய தொழில் அதிபர்கள், வணி கர்கள், பிரமுகர்கள் எல் லோரும் ஒரே இடத்தில் கூடி தொகுதிக்கு நான் என்னவெல்லாம் செய்யப் போகின்றேன் என்பது குறித்து அறிந்து கொள்ள ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார்கள்.

அதில் கலந்து கொண்டு நான் உரையாற்றும் போது ஒன்றை குறிப்பிட்டேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் போட்டியிடும் நான் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதை சிலர் விமர்சித்துக் கொண்டிருக் கின்றனர். அதுகுறித்து தவறான தகவல்களை - வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். அவற்றிற்கெல்லாம் விடை சொல்லும் வகையில் நான் முஸ்லிம் லீக் காரன்தான். எனது அனைத்து செயல் களும் முஸ்லிம் லீகின் கொள்கைகளுக்கும், நடை முறைக்கும் தக்கபடிதான் அமையும். எந்த நேரத்திலும் எத்தகைய சூழ்நிலையிலும் முஸ்லிம் லீகை மறந்து எனது செயல்பாடு அமை யாது என்று நான் அழுத் தந் திருத்தமாக அவர்கள் மத்தியில் தெரிவித்தேன்.

என்னிடம் ஒரு கேள்வியை கேட்டார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடு வதன் காரணமாக வெற்றி பெற்று நாடாளுமன்ற சென்று சமுதாயத்திற்கும், தாய்ச்சபைக்கும் மரியாதை யை பெற்றுத் தருவீர்கள் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம் பிக்கையிருக்கிறது. ஒருவேளை தேர்தலுக்கு பின் பி.ஜே.பி.யுடன் இணைந்து ஆட்சி அமைக் கும் நிலையை தி.மு.க. மேற் கொண்டால் அப்போது உங்களின் நிலை என்ன வாக இருக்கும்? என்று கேட்டார்கள்.

நான் அவர்களிடம் அழுத்தந் திருத்தமாக கூறினேன். ஹபதவியோ - பட்டமோ - அந்தஸ்தோ - இஸ்லாத்திற்கும் - முஸ்லிம் சமுதாயத்திற்கும் சேவை யாற்றும் வகையில் இருக்க வேண்டும் என்பதுதான் தாய்ச்சபையின் கொள்கை. தாய்ச்சபையின் லட்சியத் திற்கு மாறாக நடக்கும் நிலை ஏற்பட்டால் பதவி களையும், பட்டங்களை யும் தூக்கி எறிவேனே தவிர தாய்ச்சபையின் கொள்கை களை அல்ல.

சமுதாயத்திற்கு சேவை யாற்றத் தான் - சமுதாயத் தின் குரலை ஒலிக்கத் தான் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந் தித்து நாடாளுமன்றத் துக்கு செல்கின்றோமே தவிர சமுதாயத்திற்கும், மார்க்கத்திற்கும் விரோத மான செயல்களை ஆதரிப் பதற்காக அல்ல. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நான் தாய்ச்சபை தலைவர் கள் காட்டித் தந்த வழியில் முஸ்லிம் லீகின் ஊழிய னாக இருப்பதைத்தான் விரும்புவேனே தவிர, பதவி - பட்டத்திற்காக மாறி போய் விட மாட்டேன் என்பதை அவர்கள் மத்தி யில் எடுத்துரைத்தேன்.

அதனையே உங்களுக் கும் கூறிக் கொள்கின்றேன். தாய்ச்சபையின் ஊழியனா கிய எனது வெற்றி தனிப் பட்ட அப்துல் ரஹ்மா னின் வெற்றி அல்ல. அந்த வெற்றியில் தாய்ச்சபை ஊழியர் ஒவ்வொருவருக் கும் பங்கு இருக்கிறது.

தாய்ச்சபையின் கொள்கைக்கு உட்பட்டு சமுதாயத்தின் மானம், மரியாதை காக்கும் வகை யில் எனது செயல்பாடுகள் அமையும் வண்ணம் உங்களது ஆலோசனை களையும், கருத்துக்களை யும் தெரிவியுங்கள்.

ஒருவேளை நான் தவ றிழைக்க நேர்ந்தால் ஏதே னும் குற்றம் குறைகள் காணப்பட்டால் அதனை தைரியமாக சுட்டிக்காட்டி என்னை திருத்துங்கள். அந்த உரிமை உங்கள் ஒவ் வொருவருக்கும் உண்டு.

எனது வெற்றிக்காக பாடுபட்ட தாய்ச்சபையின் அனைத்து ஊழியர்களுக் கும், சமுதாய மக்களுக்கும் கூட்டணி கட்சியினருக்கும் எனது நன்றியையும், நல் வாழ்த்துக்களையும் தெரி வித்துக் கொள்கிறேன்.

தாய்ச்சபை ஊழியனாக - சமுதாயத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்கும் பணிகள் அமையும் என்ற உறுதி கூறி விடைபெறுகின்றேன்.

இவ்வாறு அப்துல் ரஹ்மான் பேசினார்

Thursday, May 14, 2009

முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் பள்ளி 100% சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டன

முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் பள்ளி பிளஸ்-2 தேர்வில் 1000-க்கு மேல் மதிப்பெண் பெற்று ரஹ்மத் பெண்கள் பள்ளி மாணவிகள் 11 பேர் சாதனை படைத்துள்ளனர்.ரஹ்மத் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100% சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

1113மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தைப் பிடித்துள்ள மாணவி(Zubriya)

பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

அனைத்து மாணவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

www.muthupet.org web team

பிளஸ்டூ ஜூன் மாதம் மறுதேர்வு எழுதலாம்

பிளஸ் 2 தேர்வில் மூன்று அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தோல்வியுற்றவர்களுக்கு வரும் ஜூன் 22ம் தேதி துவங்கும் சிறப்பு துணை தேர்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வில் தவறியவர்கள் வரும் ஜூன் மற்றும் ஜூலையில் நடக்கும் மறுதேர்வில் கலந்து கொள்ளலாம். மூன்று அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தவறியவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும்.

நான்கு பாடங்களுக்கு மேல் தோல்வியுற்றவர்கள் இதில் பங்கேற்க முடியாது. இந்த சிறப்பு தேர்வுகள் வரும் ஜூன் 22 முதல் ஜூலை 2ம் வரை நடக்கும் என தெரிகிறது.

25ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்...

மாணவ, மாணவியர்கள் வரும் 25ம் தேதி தங்களின் பள்ளிகள் மூலம் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம். தனி தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களுக்கு சென்று தங்களது சான்றிதழ்களை வாங்கி கொள்ளலாம்.

விடைத்தாள் திருத்துதலில் சந்தேகம் இருக்கும் மாணவர்கள் கணிதம், இயற்பியல் மற்றம் உயிரியல் பாடங்களுக்கு விடைத்தாள் நகல் கேட்டு பெறலாம். இதற்கான விண்ணப்பம் வரும் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

ரூ. 275 செலுத்தி இந்த விண்ணப்பத்தை பெற்று கொள்பவர்கள் மட்டுமே மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடுக்கான விண்ணப்பம், விடைத்தாள் நகலுடன் இணைக்கப்பட்டிருக்கும்

Wednesday, May 13, 2009

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன

நாளை பிளஸ் டூ முடிவுகள்

சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பிளஸ் டூ தேர்வுகள் நடந்தன.

5,040 பள்ளிகளைச் சேர்ந்த 6,47,630 மாணவ, மாணவிகள் 1,738 மையங்களில் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 3 லட்சத்து 4 ஆயிரத்து 900 பேர் மாணவர்கள். 3 லட்சத்து 42 ஆயிரத்து 730 பேர் மாணவிகள். கடந்த ஆண்டைவிட 54 ஆயிரத்து 326 பேர் கூடுதலாக எழுதினார்கள்.

இந்தத் தேர்வு முடிவுகல் நாளை வெளியாகும் என பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி அறிவித்தார்.


தேர்வு முடிவுகளை நமது இணையதளத்தில் (swww.muthupet.org ) காணலாம் கொடுக்கப்பட்டுள்ள தழிழ் நாடு அரசு இணையத்தின் தொடர்பை சொடுக்கி நீங்கள் தேர்வு முடிவுகளை காணலாம்.


இந்தத் தேர்வு முடிவுகள் www.pallikalvi.in, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in, ஆகிய இணையத் தளங்களிலும் காணலாம்.

எஸ்எம்எஸ் மூலமும்..

இந்தத் தேர்வு முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலமும் அறிய தமிழக பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

அதன் இணையதளமான பள்ளிக் கல்வி மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் ஆகியவை இணைந்து இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளன. பிஎஸ்என்எல் செல்போன் சந்தாதாரர்கள் 54373 என்ற எண்ணுக்கு தேர்வு எண்ணை குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். செய்தால் தேர்வு முடிவு உடனடியாக தெரிவிக்கப்படும்.

முதலில் HSC என்று ஆங்கிலத்தில் டைப் செய்து ஒரு இடம் விட்டு பின்னர் தேர்வு எண்ணை டைப் செய்து அதை 54373 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும்.

மேலும், பிஎஸ்என்எலின் 1250108 என்ற லேண்ட்லைன் எண்ணிலும், 1250108 என்ற மொபைல் எண்ணிலும் தேர்வு முடிவுகளைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

Monday, May 4, 2009

எம். அப்துல் ரகுமானை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் இ. அஹமது



வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் வேட்பா ளர் எம். அப்துல் ரகுமானை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் இ. அஹமது, பொதுச் செயலாளர் பேரா சிரியர் காதர் மொகிதீன் எம்.பி., தேசிய செயலாளர் அப்துஸ் ஸமது ஸமதானி ஆகியோர் பிரச்சாரம் செய்கின்றனர்.

தொகுதி முழுவதும் அப்துல் ரகுமானுக்கு ஆதர வாக உற்சாகமான எழுச்சி ஏற்பட்டுள்ளது.

நடைபெற உள்ள நாடா ளுமன்ற பொதுத் தேர்த லில் தி.மு.க தலைமையி லான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனி யன் முஸ்லிம் லீகிற்கு வேலூர் தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது.

அத்தொகுதியில் போட் டியிடும் எம். அப்துல் ரகுமான் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 2-3 தேதிகளில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் ஒன்றியம், ஜவ்வாது மலை கிராமங் களில் ஓட்டு சேகரித்தார்.

திருப்பத்தூர் ஒன்றியத்தில் 17 கிராமங்களிலும் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு வேட்டையாடினார்.

இன்று மாதனூர் ஒன்றியத்தில் உள்ள அகரம் சேரி, சின்னச் சேரி, கொள்ளமங்கலம், பள்ளிக் குப்பம், அக்ரஹாரம், சோளம் பள்ளி, அகரம், போடித் தாடை, குருவராஜ பாளையம், வேப்பம் குப்பம், குப்பம் பட்டு உள் ளிட்ட ஊர்களில் வாக்கு சேகரித்தார்.

நாளை அணைக்கட்டு ஒன்றியத்தில் வாக்கு சேகரிக்கிறார்.

முஸ்லிம் லீக் தலைவர்கள் வருகை
வரும் 5ம் தேதி செவ்வாய் கிழமை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயலாளர் பன் மொழிப் புலவர் அப்துஸ் ஸமது ஸமதானி வேலூர் தொகுதி வருகிறார்.

மாலை 5மணிக்கு வேலூரிலும், இரவு 7 மணிக்கு குடியாத்தத்தி லும், 8.30 மணிக்கு வாணியம் பாடியிலும் உரையாற்று கிறார்.

6ம் தேதி சென்னை வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹமது அன்று மாலை தீவுத் திடலில் திருமதி சோனியா காந்தி, முதல்வர் கலைஞர் பங்கேற்கும் பிரமாண்ட மான பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இக்கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்எம்.பி.,யும் கலந்து கொள்கிறார்.

7ம் தேதி வியாழக் கிழமை தலைவர்கள் இருவரும் மாலை 6மணிக்கு வாணியம்பாடி யிலும், 7 மணிக்கு ஆம்பூரி லும் பொதுக் கூட்டங் களில் பங்கேற்கின்றனர்.

8ம் தேதி வெள்ளிக் கிழமை காலை பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர்.

இசை நிகழ்ச்சி மூலம் தெருமுனை பிரச்சாரம்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் முகவை சீனி முகம்மது குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும், மாநில செயலாளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர் ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் கீழ்க்கண்டவாறு நடைபெறுகின்றன.

6ம் தேதி பேர்ணாம் பட்டு, 7ம் தேதி வாணியம் பாடி, 8ம் தேதி குடியாத் தம், 9ம் தேதி வேலூர், 10ம் தேதி ஆம்பூர் ஆகிய இடங் களில் நடைபெறுகின்றன.

வேலூர் தொகுதி முழுவ தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு ஆதரவாக உற்சாகமான எழுச்சி ஏற்பட்டுள்ளது.