Sunday, April 26, 2009

வேலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமான் வேட்புமனு ஏற்பு

வேட்புமனு பரிசீலனை: வேலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமான் வேட்புமனு ஏற்பு

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியி டும் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் மனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்டன.

வேலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம்.அப்துல் ரகுமான் மனு ஏற்கப்பட்டது. வடசென்னையில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் தா. பாண்டியனின் மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

15வது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 5 கட்டங் களாக நாடு முழுவதும் நடைபெறுகிறது. இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது. கடைசி கட்டமாக நடைபெறும் தமிழ்நாட்டில் வேட்பு மனுக்கள் ஏப்ரல் 17-ந்தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது.

அ.இ.அ.தி.மு.க. அணியை சேர்ந்தவர்கள் 17-ம் தேதி தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய் திருந்தனர். தி.மு.க. அணியி னர் பெரும்பகுதியினர் 22-ம் தேதி வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். எஞ்சிய அனைவரும் கடைசி தினமான நேற்று தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இன்று மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டன. தேர்தல் ஆணையம் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்ட வகையில் மனுக்கள் இருந்தால் அவைகள் ஏற்கப்படும்.

வேலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் எம். அப்துல் ரகுமானின் மனு பரிசீலனை செய்யப்பட்டது. அதில் எழுப்பப் பட்ட ஆட்சேபணை தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டு அம்மனு ஏற்கப்பட்டது.
அப்துல் ரகுமானின் சார்பில் தலைமைத் தேர்தல் முகவரும், வேலூர் சட்டமன்ற உறுப்பினரு மான ஞானசேகரன், வேட்புமனுவை முன் மொழிந்திருந்த மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் வழக்கறிஞர் முஹம்மது சகி, தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வெ. ஜீவகிரிதரன் ஆகியோர் பங்கேற்றனர்.

Monday, April 20, 2009

இந்திய தவ்கீத் ஜமாஅத் மாணவரணி நடத்திய "ஜைதுக்காடுவோம்" மாணவர் கருத்தரங்கம்.

அல்லாஹ்வின் திருபெயரால்...


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

இந்திய தவ்கீத் ஜமாஅத் மாணவரணி நடத்திய "ஜைதுக்காடுவோம்" மாணவர் கருத்தரங்கம்.


இன் நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்திய முத்துபேட்டை இல்யாஸ்.

இன் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெற்றவர்களின் விபரம்...


சகோ. எஸ்.எம். பாக்கர். இந்திய தவ்கீத் ஜமாஅத் மாநில தலைவர்.
தலைப்பு: மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள்.



திரு. குமாரசாமி, அவர்கள் (முன்னால் )
தலைப்பு: காவல்துறை- பொதுமக்கள் நல்லுறவு.


திருவே. தேவநாதன். அவர்கள். யாதவ மகாசபை தலைவர் மற்றும் வின் டிவி உரிமையாளர்.
தலைப்பு: செய்தி ஊடகங்களின் மாணவர்களின் பங்கு

ஜனாப். மேஜர், ஜிலானி. முஹமத் சதக் கல்லூரி டீன்.
தலைப்பு: இன்றைய மாணவர்கல் நாளைய தலைவர்கள்.

தோழர்: டி.எஸ்.எஸ். மணி. சமூக ஆர்வலர்.
தலைப்பு: மனித நேயமும் மாணவர்களும்.

நன்றிவுரை: எ. முகமது அசாருதீன். முஹமத் சதக் எ. ஜெ. பொறிஇயல் கல்லூரி.

நடைபெற்ற நிகல்ட்சியை நமது வின் தொலைக்காட்சி இல் 21.04.2009 செவ்வாய்கிழமை இரவு 10.30pm காண தவறாதீர்கல்..

இப்படிக்கு:
இந்திய தவ்கீத் ஜமாஅத் மாணவரணி
சென்னை மாவட்டம்.

For more deatails plz condcut below this number.
98426 81426.
Mohamed Ilyas.MBA.MA.Journalist.Muthupet.
intj student wing president.

Thursday, April 16, 2009

உம்ரா பயணம்

துபாய் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் உறுப்பினர்களன

M.A.K. சிராஜீதீன் S/O மர்ஹும் M.A.K. அப்துல் கரீம்.

S. அஹம்மது ராவுத்தர் ( செல்லவாப்பா ) S/o மர்ஹும் M.R.S. சுல்தான் சிக்கந்தர்.

M ஜகபருல்லா S/o M. முகம்மது இபுறாகிம்

இவர்கள் அனைவரும் 15.04.2009 புதன் கிழமை புனித உம்ரா பயணம் புறப்பட்டு சென்றார்கள் அவர்களின் உம்ரா பயணம் மிக சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்யுங்கள்

thanks for
சியாமாலிக்

Tuesday, April 14, 2009

துபாய்வாழ் தமிழர்களுக்கு மட்டும்

துபாயில் சமீபநாட்களாக நூதனமான முறையில் திருடர்கள் உலா வருகிறார்கள்…

சிலருக்கு கைபேசியில் தொடர்புக் கொண்டு துபாய் டெலிகம்யூனிக்கேசனிலிருந்து (இட்டிசலாட்) பேசுவதாகக்கூறி நம் சிம் கார்டில் உள்ள PUK நம்பரை கூறி சோதிக்க சொல்வார்கள்…அவர்கள் சொல்லக்கூடிய நம்பர் சரியாக இருக்கும்.

…பின்னர் நமக்கு ஒருலட்சம் திரஹம் பரிசு விழுந்திருக்கிறது இதைப் பெறுவதற்கு ஏதாவது ஒரு வங்கிப் பெயரைச் சொல்லி அங்கு வரச் சொல்லி ஒருநேரத்தை கூறுவார்கள். நாமும் உண்மையென நம்புவோம்..

பின் துபாய் இட்டிசலாட் டெலிபோன் ரீசார்ஜ் கார்ட் 1000 திரஹகத்துக்கு வாங்க சொல்லி அதன் இரகசிய எண்ணை கேட்பார்கள்…நாம் கொடுத்தவுடன் அவ்வளவுதான் …நம்முடைய 1000 திரஹகம் அபேஸ்…

இப்படி நூதனமுறையில் ஏமாற்றப்பட்டு பலர் ஏமாந்து வருகிறார்கள்…ஆதலால் துபாய் வாழ் தமிழர்களே…உசாராக இருங்கள்

உனக்கும் பே பே,உன் அப்பனுக்கும் பே பே?கருணாநிதி-ஜெயலலிதா ஒரே பார்முலா?முஸ்லீம்களுக்கு சீட்டே இல்லை!

அதிமுக கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பிடித்து வரும் இந்திய தேசிய லீக் கட்சிக்கும், திமுகவால் தொங்கலில் விடப்பட்ட மனித நேய மக்கள் கட்சிக்கும் ஜெயலலிதா சீட் ஒதுக்கவில்லை.

இதையடுத்து இந்த இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் 2 சீட் கேட்டது தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சி. ஆனால், ஒரு சீட் தருகிறோம் என திமுக சொன்னதை ஏற்காமல் அதிமுகவுடன் பேச ஆரம்பித்தது.

இதையடுத்து தனது கூட்டணியில் நெடுங்காலமாக உள்ள இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதியை ஒதுக்கிவிட்டு மனித நேயக் கட்சியைப் பற்றி பேசாமலேயே விட்டுவிட்டார் முதல்வர் கருணாநிதி.

இந் நிலையில் இந்தக் கட்சி அதிமுகவிலும் இரண்டு இடங்கள் கேட்டது. ஆனால், அங்கும் இந்தக் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்படவில்லை.

அதே போல ஜெயலலிதாவை நம்பி நெடுங்காலமா அந்தக் கூட்டணியில் உள்ள இந்திய தேசிய லீக் கட்சியையும் அந்தரத்தில் விட்டுவிட்டது அதிமுக.

இந்தக் கட்சிகள் வேலூர், ராமநாதபுரம், மத்திய சென்னை, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கு குறி வைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் வேலூரில் எல்.கே.எம்.பி. வாசு, மயிலாடுதுறையில் ஓ.எஸ்.மணியன், ராமநாதபுரத்தில் சத்தியமூர்த்தி, மத்திய சென்னையில் எஸ்எஸ் சந்திரன் ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்திவிட்டார் ஜெயலலிதா.

முஸ்லீம்களுக்கு சீட்டே இல்லை:

மேலும் அதிமுக சார்பில் ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட நிறுத்தப்படவி்ல்லை. நெல்லை வேட்பாளரான கிருஸ்துவரான சிந்தியா பாண்டியன் மட்டுமே சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

thanks for
அதிரை Express

அரசியல் அதிரடி!தனித்து போட்டியிடும் ம ம க வுக்கு சரத்குமார் கட்சி ஆதரவு!!!

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. மத்திய சென்னை, மயிலாடுதுறை மற்றும் இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகின்றது.

மயிலாடுதுறையில் தமுமுக தலைவர்
பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மத்திய சென்னையில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, இராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ் கான் ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளனர்.

மேலும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, டாக்டர். கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இவ்விரண்டு கட்சிகள் போட்டியிடும் இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்.

தி மு க நெருக்கடி!சிக்கலில் முஸ்லிம் லீக்?



வேலூர் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடும் காதர் மொய்தீனை உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக வலியுறுத்தியதால், அவர் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளார். இதையடுத்து வேறு வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளார்.

காதர் மொய்தீன் கடந்த 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இதே வேலூர் தொகுதியில்தான் போட்டியிட்டார். அப்போதும் திமுக கூட்டணியில்தான் அவர் இருந்தார். அம்முறை அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.


ஆனால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவராக இருந்து கொண்டு, திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டதால் அவரது பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் இந்த வழக்கில் காதர் மொய்தீனுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது.

இந் நிலையில் இதுபோன்ற சர்ச்சை ஏற்படாமல் இருக்க வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்குப் பதில், முஸ்லீம் லீக்கின் ஏணி சின்னத்தில் போட்டியிடுவேன் என காதர் மொய்தீன் கூறியிருந்தார்.

ஆனால் திமுக தரப்பிலோ, ஏணி சின்னத்தில் நின்றால் சுயேச்சை வேட்பாளர் என மக்கள் கருதுவார்கள். சின்னத்தை பிரபலப்படுத்துவது சிரமம். எனவே உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது.

இதுதவிர தமிழகம் முழுவதும் சென்று இஸ்லாமியர்களின் வாக்குகளை திரட்ட பிரசாரம் செய்ய வேண்டும் எனவும் அவருக்கு திமுக தரப்பு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு காதர் மொய்தீன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று மாலை கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் மண்ணடியில் நடக்கிறது. அப்போது யுனானி டாக்டர் ஹக்கீம் சையத் சத்தார் அல்லது துபாய் பிரிவு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பிரிவு தலைவர் அப்துல் ரஹ்மான் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராகலாம் எனத் தெரிகிறது

Monday, April 13, 2009

’முஸ்லிம்கள் வெற்றியடைய அல்லாஹ்விடம் துஆ செய்தவனாக..’..

’முஸ்லிம்கள் வெற்றியடைய அல்லாஹ்விடம் துஆ செய்தவனாக..’... சகோதரரின் வேண்டுகோள் தமிழக முஸ்லிம்களின் மன நிலையை எதிரொளிக்கிறது.. இருக்கின்ற முஸ்லிம்களை தவ்ஹீது - இயக்கம் என்ற பெயரில் கூறு போட்டு..மாற்று இயக்கத்தில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக சக முஸ்லிமுக்கு சலாம் கூற மறுக்கும்-வெறுக்கும் மணப்பாங்கு முஸ்லிம்கள் மத்தியில் வளர காரணமான தலைவர்களும்..இருக்கும் வரை.. தன் கருத்தை ஏற்காதவர்களுக்கு - குழி பறித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் தலைவர்கள் நிறைந்த இந்த சமுதாயத்தை..அத்தகைய தலைவர்களை ’தக்லீது’ செய்யும் ‘தொண்டரடிப்பொடிகளாக’ நமது சமுதாயம் இருக்கும் வரை.. வல்ல இறைவன் எப்படி காப்பாற்றுவான்..? இழந்தது போது..இருக்கின்ற பிரசினைகளுக்கு காரணமான தான் தோன்றி தலைவர்களை புறக்கணீத்து ,.. அவர்களின் சுயநலமிக்க திட்டங்களை - தோலுரித்துக்காட்ட நாம் முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டால் போதும்.. நமது துவாக்களை இறைவன் நிச்சயம் ஏற்பான்.. அரசியல் புறக்கணிப்புக்கு ஆளாகியதும் கருனாநிதியையும், செயலலிதாவையும், ஹிந்துத்வ சக்திகளையும் காரணமாக காட்டுவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல.. இந்த இழிநிலைக்கு முழுமையான காரணம் நம்து இயக்கக்ங்களின் கையாளாகாதத் தனம் மட்டும்தான்.. இந்த இழிநிலைக்கு முழுமையான காரணம் நம்து இயக்கக்ங்களின் கையாளாகாதத் தனம் மட்டும்தான்.. இந்த இழிநிலைக்கு முழுமையான காரணம் நம்து இயக்கக்ங்களின் கையாளாகாதத் தனம் மட்டும்தான்..

ஆந்திரா லாட்ஜில் அடைத்து சென்னை பெண்ணை கற்பழித்த போலீஸ்காரர்

சென்னை, ஏப். 10- சென்னை யானை கவுனி ஜெனரல் முத்தையா முதலி தெருவை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 24). இவரது செல்போனுக்கு சில மாதங்களுக்கு முன்பு மிஸ்டு கால் ஒன்று வந்தது. அந்த நம்பரில் தொடர்பு கொண்டபோது எதிர் முனையில் மதன்குமார் (27) என்பவர் பேசினார். அதன் மூலம் ஏற்பட்ட பழக்கம் நட்பானது. எல்லை பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக பணிபுரிவதாக கூறி பத்மாவதியிடம் நெருங்கி பழகினார். சில நாட்களுக்கு முன்பு திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட அழைத்து சென்றார். காளகஸ்தியில் உள்ள லாட்ஜில் பத்மாவதியை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்தார். மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்தார்.
அதை குடித்து பத்மாவதி மயங்கினார். அப்போது அவரை மதன்குமார் கற்பழித்தாக கூறப்படுகிறது. பின்னர் திருமணம் செய்வதாக கூறி சமாதானம் செய்தார். ஆனால் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என கூறி திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மதன்குமார் வீடு குரோம்பேட்டையில் உள்ளது. அவர் இங்கிருந்து காஷ்மீருக்கு சென்று விட்டார். எனவே மதன்குமார் மீது நடவடிக்கை எடுத்து அவரை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என பத்மாவதி பூக்கடை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Friday, April 10, 2009

தமிழ் நிறுவனத்திற்கு துபாயின் உயரிய கௌரவ மிக்க MRM விருது...

தமிழ் நிறுவனத்திற்கு துபாயின் உயரிய கௌரவமிக்க MRM விருது...
துபாயின் உயரிய கௌரவமிக்க "சேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம்" வியாபார விருது (Business Award), ரியல் எஸ்டேட் பிரிவுக்காக தமிழ் நிறுவனமான "ETA STAR PROPERTY DEVELOPER" நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
சென்ற வருடம் ரியல் எஸ்டேட் ஜாம்பாவனான "EMAAR" நிறுவனமே இந்த விருதை"TAMEER" மற்றும் "UNION PROPERTY" போன்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்ட போது இந்த வருடம் இந்த பிரிவின் விருதை ஒரே நிறுவனம் அதிலும் தமிழ் நிறுவனம் தட்டிச்சென்றது மேலும் சிறப்பு.


இன்று காலை துபாய் "மதீனத் ஜுமைரா" வில் நடந்த சிறப்பு மிக்க விழாவில்,
இந்த பெருமை மிக்க விருதை, அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், துபாயின் ஆட்சியாளருமான உயர்திரு. முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களிடமிருந்து ETA குழுமத்தின் தலைவர் "வியாபார விஞ்ஞானி" உயர்திரு.செய்யது சலாஹூதீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

சென்ற வருடம் கட்டுமானப் பிரிவில் "ETA ASCON" இந்த விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது என்றாலும், உலக பொருளாதார வீழ்ச்சி எனும் சுழற்காற்று வீசிவரும் இந்த வேளையில் இப்படி ஒரு பெருமைமிக்க சாதனை விருதை தட்டிச்செல்வது சாதாரண விசயமில்லை, அதை ஒரு தமிழ் நிறுவனம் சாதித்திருப்பது நாம் எல்லோரும் பெருமை படக்கூடிய விசயமே...

கடந்த முப்பது வருடங்களாக தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, வெளிநாட்டில் குறிப்பாக அமீரகத்தில் ' ஏ மதராசி என்று அலட்சியமாக அழைத்தவனெல்லாம் ஆப் மதராசி ஹை?! (வரி உபயம்:அண்ணாச்சி) என்று ஆச்சரியமாகக் கேட்க வைத்தற்கு காரணமான ஒரு பெருமை மிக்க நிறுவனமான ETA குழுமத்தின் கிரீடத்தில், இந்த விருது மேலும் ஒரு வைரமாக மிளிருமென்றால் அது மிகையாகாது.

Thursday, April 9, 2009

முத்துப்பேட்டை அப்துல் ர‌ஹ்மான் வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி வேட்பாள‌ராக‌ தேர்வு


வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி வேட்பாள‌ராக‌ அப்துல் ர‌ஹ்மான் தேர்வு
வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் க‌ட்சியின் வேட்பாளராக‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் உல‌க ஒருங்கிணைப்பாள‌ரும், அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் த‌லைவ‌ருமான‌ முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான் அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.
இத்த‌க‌வ‌ல் வியாழ‌க்கிழ‌மை இர‌வு இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாநில‌ த‌லைமை நிலைய‌மான‌ காயிதெமில்ல‌த் ம‌ன் ஜிலில் மாநில‌ த‌லைவ‌ர் முனீருல் மில்ல‌த் பேராசிரிய‌ர் கே.எம். காத‌ர் மொகிதீன் எம்.பி. த‌லைமையில் ந‌டைபெற்ற‌ அவ‌ச‌ர‌ செய‌ற்குழுக்கூட்ட‌த்தில் முடிவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.
மேலும் ச‌முதாய‌ வேண்டுகோளின்ப‌டி உத‌ய‌சூரிய‌ன் சின்ன‌த்தில் போட்டியிடுவ‌து என்றும் முடிவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.
முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான் ப‌ள்ளிக்க‌ல்வியை ஆக்கூர் ஓரிய‌ண்ட‌ல் உய‌ர்நிலைப்ப‌ள்ளியில் ப‌டித்தார். ப‌ள்ளிப்ப‌டிப்பின் போதே மாநில‌ அள‌விலான‌ பேச்சுப் போட்டிக‌ளில் வெற்றி பெற்றுள்ளார். பின்னர் ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரியில் க‌ல்லூரிப் ப‌டிப்பினைப் ப‌யின்றார்.
க‌ட‌ந்த‌ கால் நூற்றாண்டுக்கும் மேலாக‌ அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ரும் இவ‌ர் துபாய் இஸ்லாமிய‌ வ‌ங்கியின் த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌த்துறையில் உத‌வித் த‌லைவ‌ராக‌ இருந்து வ‌ருகிறார்.
துபாய் ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர்க‌ளில் ஒருவ‌ராக‌வும், ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி ப‌ழைய‌ மாண‌வ‌ர் ச‌ங்க‌ பொதுச்செய‌லாள‌ராக‌வும் இருந்து வ‌ருகிறார்.
அமீர‌க‌த்தில் ச‌முதாய‌ப் ப‌ணிக‌ளின் மூல‌ம் இந்திய‌ ம‌க்க‌ளுக்கு ப‌ல்வேறு சேவைக‌ளைச் செய்து வ‌ருகிறார். அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ந்தாலும் தாய‌க‌த்தில் ச‌மூக‌ந‌ல‌ப்ப‌ணி மேற்கொள்ள‌ வேண்டும் என்ற‌ ஆவ‌லைக் கொண்ட‌வ‌ர்.
இந்த‌ அவ‌ச‌ர செய‌ற்குழுவில் மாநில‌ பொதுச்செய‌லாள‌ர் டாக்ட‌ர் சைய‌த் ச‌த்தார், மாநில‌ நிர்வாகிக‌ள், அமீர‌க காயிதெமில்ல‌த் பேரவை பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.
அமீர‌க‌ப் பிர‌முக‌ர்க‌ள் வாழ்த்து
எம். அப்துல் ர‌ஹ்மான் தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ செய்திய‌றிந்து அமீரக‌த்தில் செய‌ல்ப‌ட்டு வ‌ரும் ப‌ல்வேறு அமைப்புக‌ளின் நிர்வாகிக‌ள் த‌ங்க‌ள‌து ம‌கிழ்ச்சியினையும், வாழ்த்தினையும் தெரிவித்துள்ள‌ன‌ர்.
அமெரிக்கா
அமெரிக்கா காயிதெமில்ல‌த் பேரவை அமைப்பாள‌ர் தோப்புத்துறை முஹ‌ம்ம‌து நூர்தீன், குவைத் காயிதெமில்ல‌த் பேர‌வை அமைப்பாள‌ர் டாக்ட‌ர் அன்வ‌ர் பாஷா, ச‌வுதி அரேபிய‌ காயிதெமில்ல‌த் பேரவை நிர்வாகிக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் த‌ங்க‌ள‌து வாழ்த்தினை வெளிப்ப‌டுத்தியுள்ளன‌ர்.
செய்தி : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

Wednesday, April 8, 2009

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் முக்கிய அறிவிப்பு


முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் முக்கிய அறிவிப்பு

Sunday, April 5, 2009

சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் முத்துப்பேட்டையில் ஓட்டலை சூறையாடிய 3 வாலிபர்கள் கைது

சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம்

முத்துப்பேட்டையில் ஓட்டலை சூறையாடிய 3 வாலிபர்கள் கைது

முத்துப்பேட்டையில், சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் ஓட்டலை அடித்து உடைத்து சூறையாடினர். இதுதொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

முத்துப்பேட்டை ஆசாத்நகரில் ஓட்டல் கடை நடத்தி வருபவர் முத்துமணி (வயது 38). நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு கன்னியா குறிச்சியைச்சேர்ந்த சுப்பிரமணியன் மகன் குமார் (38), மேலநத்தம் கலைச்செல்வன் மகன் சரவணன் (23), பெருக வாழ்ந்தான் வீரையா தேவர் மகன் குமார் (29) மற்றும் அவர்களின் நண்பர்கள் 12 பேர் சாப்பிட வந்தனர்.

இவர்கள் அனைவரும் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மது அருந்தி வந்துள்ளனர். அனைவரும் சாப்பிட்டு முடிந்தவுடன் முத்துமணி, சாப்பிட்டதற்கு பணம் கேட்டுள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த அவர்கள் கடையில் வேலைபார்த்த ஊழியர்களை தாக்கினர். மேலும், கடையில் இருந்த பர்னிச்சர் பொருட்களையும், பாத்திரங்களையும் அடித்து உடைத்து சூறையாடி னர்.

3 வாலிபர்கள் கைது

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசில் முத்துமணி புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சின்னசாமி வழக்குப்பதிவு செய்து குமார், சரவணன், மற்றொரு குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 12 பேரையும் வலைவீசி தேடி வருகின்றார்கள்.