Friday, November 20, 2009

முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 30 இடங்களில் கண் சிகிச்சை முகாம்

முத்துப்பேட்டை ஒன்றியத்தில்30 இடங்களில் கண் சிகிச்சை முகாம்ஒன்றியக்குழுத் தலைவர் தகவல்

முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 30 இடங்களில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்படும் என்று ஒன்றியக்குழுத் தலைவர் தெரிவித்தார்.

ஆலோசனைக் கூட்டம்

முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 29 ஊராட்சிகளிலும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்துவது குறித்த ஆலோ சனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழுத் தலைவர் எம்.கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜுலியட் ஜெயசிந்தாள், பால கிருஷ்ணன், மாவட்ட பார்வை யிழப்பு தடுப்பு சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வரத ராஜன், கணக்கர் நாகலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ந.உ.சிவசாமி, தெட்சிணா மூர்த்தி மற்றும் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள், எழுத்தர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஒன்றியக்குழுத் தலைவர் எம்.கல்யாணசுந்தரம் பேசியதாவது:-

கண் சிகிச்சை முகாம்

முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்களுக்கு கண் மருத்துவ உதவியாளர்களைக் கொண்டு இலவச கண் பரிசோதனை செய்து கண்புரையால் உள்ளவர்களை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தையல் இல்லா கண் அறுவை சிகிச்சை செய்யப்படும்.

கண் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுவர வாகன வசதி, தங்குமிடம், உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

30 இடங்கள்

அதன்படி முத்துப்பேட்டை, கோவிலூர், மேலநம்மங்குறிச்சி, கீழநம்மங்குறிச்சி, தம்பிக்கோட்டை - கீழக்காடு, ஜாம்பு வானோடை, ஆலங்காடு, உப்பூர், மாங்குடி, மருதவனம், வங்கநகர், வடசங்கேந்தி, தோலி, ஆரியலூர், உதயமார்த் தாண்டபுரம், இடும்பாவனம், எடைïர், ஓவரூர், கள்ளிக்குடி, கற்பகநாதர்குளம், கீழப்பெருமழை, குன்னலூர், சங்கேந்தி, பாண்டி, பின்னத் தூர், மேலப் பெருமழை, விளாங்காடு, வேப்பஞ்சேரி, தில்லை விளாகம், தொண்டியக்காடு ஆகிய ஊர்களில் இலவச சிகிச்சை முகாம் நடக்கிறது.

எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Monday, October 5, 2009

மறுமலற்ச்சி அடைந்தது முத்துப்பேட்டை அசோசியேசன் சிங்கப்பூர்(M.A.S)








அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)....
04/10/2009 ஞாயிற்றுகிழமை பின்னேரம் 4:30 மணி முதல் 6:30 மணி வரை முத்துப்பேட்டை அசோசியேசன் சிங்கப்பூர் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் ஜனாப்.அல்ஹாஜ் M.A.முஸ்தபா முன்னிலையில் சிங்கப்பூர் சிராங்கூன் சாலையில் உள்ள ஒரு அமைப்பு கூடத்தில் நடைப்பெற்றது.
இது சமயம் பல வருடங்கலாக காலசூழலின் தவிற்கமுடியாத காரனங்கலாலும் செயல்பட முடியாமல் போனதை விவரிக்கப்படது.எதிர்வரும் காலத்தில் இந்த நிலை தொடராமல் இருக்கஉம் அதேசமயம் இந்த முத்துப்பேட்டை அசோசியேசன் சிறப்பாக நடத்த முன் வரும் நண்பர்களை அவர்கலாகவே முன் வந்து செயல்பட விரும்புபவர்கலுக்கு இந்த அசோசியேசன் உதவி புரியூம் என்பதையும் விலக்கம் தந்தார்.

அத்துடன் எதிர்வரும் 31/10/2009 சணிக்கிழமை மாலை மஹ்ரிபுக்கு பிறகு அடுத்த சந்திப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது என்றும்,இந்த சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது அனைத்து உறுப்பினர்களின் முகவரி,தொலைப்பேசி எண்கள்,இ மெயில் முகவரிகல் சேகரித்து சரிபார்ப்பது,தற்போது தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன்று குழுக்கலீல் உறுப்பினர்கல் ஒரு குலுவிற்கு மூன்று நபார் வீதமாக 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் தங்களது பிற தகவல்கலையும் நட்பு செய்திகளையும் தெறுவித்துக் கொண்டால் அவர்கள் http://www.muthupet.org/ என்ற இனையதலத்தில் உடனுக்குடன் தகவல்கல்ளை கொடுப்பது அடுத்த சந்திப்பு நிகழ்ச்சியின் அத்யாவசிய மாற்றங்களை வந்துள்ள நண்பர்கள் அசோசியேசன் பேரில் மாற்றம் செய்வதுவருடத்தில் இரண்டுமுறை குடும்ப ஒலுங்கினைப்பு செய்து ஒன்று கூடுவது என்று முடிவுசெய்யப்பட்டது.இன்ஷா அல்லா எதிர்வரும் காலக்கட்டத்தில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமலும் நமது ஊர்மக்கலுக்கு நம்மலால் செய்ய முடிந்ததை அவர்களாகவெ விருப்பு,வெருப்பின்றி தனி நபர் தூன்டுதலோ,தலைமைத்தனமோ இல்லாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதெ முக்கிய நோக்கம்,அதேசமையம் தலையாய கடமையாக இருக்கவேண்டும் என்பதெ இந்த அசோசியேசன் வேண்டுகோள் விடுக்கிறது.

நண்றி!!
முத்துப்பேட்டை அசோசியேசன் சிங்கப்பூர்(M.A.S)
உறுப்பினர்கல்

1.தமீம் நசீர்- 0065 90121402

2.ஜாகிர்-0065 94860860
3. ரஷித் அலி-0065 91609364
எதேனும் உங்கள் கருத்தை சொல்லவிரும்புவோர் mas@muthupet.org இந்த இ- மெயில் முகவரிக்கு தெரியப்படுத்தெவும்

Sunday, October 4, 2009

மனித நேய மத நல்லினக்க 162 ம் ஆன்டு பெரிய ஹந்தூரி விழா!!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).....

நமது ஊரில் நடைப்பெற்ற மனித நேய மத நல்லினக்க 162 ம் ஆன்டு பெரிய ஹந்தூரி விழா 22/09/09 மாலை 4:30 மனியலவில் சுமார் 2500 போலீஸ் பாதுகாப்புடன் நடைப்பெற்றது.

இது நமதூர் அரபு சாஹிப் பள்ளிவாசலில் இருந்து புரப்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆசாத் நகரை சுற்றி மருபடியும் பழய இடத்திற்கெ வந்தடைந்தது.அன்று இரவு சுமார் 9:00 மனி அலவில் மிக பிரம்மன்டமாக வான வேடிக்கைகலுடன் சிறப்பான கொடி ஏற்றம் நடைப்பெற்றது.

இந்த விழாவில் 5000க்கும் மேற்பட்டோர் திரலாக ஆண்கலும் பெண்கலும் வந்து கலந்து கொண்டனர்.இதற்கு முதுப்பேட்டையில் உள்ள அனைத்து முஸ்லீம் கட்சிகலும், இயக்கங்கலும் ஆதரவு கொடுத்தது குறிப்பிடதக்கது.




























































Monday, September 28, 2009

மரண அறிவிப்பு!


Sunday, August 30, 2009

முத்துப்பேட்டை அமீரகப் பேரவை இஃப்தார் 2009
















முத்துப்பேட்டை அமீரகப் பேரவை
இஃப்தார் 2009
மஜாஸ் பூங்கா
ஷார்ஜா
நாள் : 28 ஆகஸ்ட் 2009
வெள்ளிக்கிழமை
சிறப்பு விருந்தினர் : எம். அப்துல் ரஹ்மான் எம்.பி

Thursday, August 27, 2009

இப்தார்விருந்தழைப்பிதழ்!!!

முத்துப்பேட்டை அமீரகப்பேரவை
இப்தார்விருந்தழைப்பிதழ்
வெள்ளிக்கிழமை சார்ஜா கார்னிச்அல்மஜாஸ்பார்க28-08-2009அன்பார்ந்த சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹ்)
புனித ரமலான்நல்வாழ்த்துக்கள்நமதுமுத்துப்பேட்டை அமீரகப்பேரவை ன் சிறப்புமிகக ஆறாம்வருட இப்தாரவிருந்து நிகழ்ச்சிஇனஷா அல்லாஹ், சார்ஜாகார்னிச் பகுதிஅல்மஜாஸ்பார்க்கில வெள்ளிககிழமை 28-08-2009மாலைக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது.அதனைத்தொடர்ந்து சிறப்பு கலந்துரையாடல் 6.40 நிகழ்ச்சியும்நடைபெறும்.தலைமை :பவுசுல்ரஹ்மான்- தலைவர்ஆ.வுமுத்துப்பேட்டை அமீரகப்பேரவைமுன்னிலை :நெய்னா முஹம்மது - தலைவர்ளுமுத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம;வரவேற்புரை : கி.மு.ஜஹபர்அலி - நிர்வாக ஆலோசகர்முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம்முத்துப்பேட்டை அமீரகப்பேரவைரூமுத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின்நிறுவனர்களில்ஒருவர்,முத்துப்பேட்டை அமீரகப்பேரவையின்புரவலர்நமது இந்திய திருநாட்டின்பாராளுமன்றத்தில்முத்துப்பேட்டையின்முதல் முத்திரை பதித்து தனிச்சிறப்புப்பெற்ற,நமது அன்பிற்கும் தனி மதிப்பிற்கும்உரிய சகோதரர்அப்துல் ரஹ்மான்N.ஆ.ஆயுஇஆPஅவர்களின்சிறப்புரையும்நடைபெறும்.இந்த சிறப்பு நிகழ்ச்சிகளில் முத்துப்பேட்டையைச்சார்ந்த சகோதரர்கள்அனைவரும்உறவினர்கள்மற்றும்நண்பர்கள்சகிதமாக கலந்து கொண்டுசிறப்பிதது தர அன்போடு அழைக்கிறோம்.
அன்புடன.முஹம்மதுபர்வீஸ
முஹம்மதுஹாத்திம
ஜஹபர்அலி
ஜஹபருல்லாமுஹம்மது
அல(மௌலானா)ழுPஆரூளு.நிறுவனர்கள்- முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம்கௌரவ தலைவர்கள் முத்துப்பேட்டை அமீரகப்பேரவை.

Tuesday, August 25, 2009

முத்துப்பேட்டை சார்பாக ரூ6300 மருத்து உதவி


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மாற்றுமத சகோதரின் 7 வயது மகளுக்கு தீக்காயம் ஏற்பட்டதை தொடர்ந்து சிகிச்கைக்காக மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் அக்குழந்தையின் உறவினர்கள் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் சிறமப்பட்டு முத்துப்பேட்டை TNTJ வை அனுகினர். உடனே TNTJ முத்துப்பேட்டை கிளை மாணர் அணி சார்பாக மருத்துவ உதவியாக ரூ 6300 அக்குழந்தைக்கு வழங்கப்பட்டது.

செப். 15-ல் பட்டுக்கோட்டை பொறியியல் கல்லூரியில் வகுப்புகள் தொடங்கும்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள ராஜாமடத்தில் ரூ. 28.30 கோடியில் கட்டப்பட்டு வரும் திருச்சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், அண்ணா பிறந்த நாளான செப். 15-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்றார் மத்திய நிதித் துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம்.

கல்லூரியில் நடைபெற்று வரும் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவர் மேலும் பேசியது: "தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி தொடங்க முதல்வர் உத்தரவிட்டதன் பேரில், அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் கட்டமாக ரூ. 2.50 லட்சம் மதிப்பில் 6 வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. ரூ. 28.30 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கல்லூரியில் 24 வகுப்பறைகள், 18 பரிசோதனை கூடங்கள், 100 மாணவர்கள் தங்குவதற்கான 16 குடியிருப்பு கட்டடங்கள் கட்டடப்படுகின்றன.

முதலாம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்புக்கு சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய 4 பிரிவுகளில் தலா 60 மாணவர்கள் வீதம் 240 மாணவ, மாணவிகள் சேர்க்கப்படவுள்ளனர்' என்றார் பழநிமாணிக்கம்.

Miwa International(Notice for Fidra‏)


H.Shaik Dawood / A.Haja Najupudeen(ANA) / M.A.K.Hidhayathulla
Mob:+97150-3436050 / +97150-5794302 / +97150-2146676

MIWA (MUTHUPET ISLAMIC WELFARE ASSOCIATION)
Dubai Committee: Post Box No: 5184, DUBAI, U.A.E.
EMAIL: miwamtt@gmail.com

Monday, August 3, 2009

அஸ்ஸலாமு அலைக்கும் முத்துப்பேட்டை வாசிகளே....

நான் தான் பேட்டை ரோட்டில் உள்ள குட்டியார் ஜூம்மா பள்ளி பேசுகிறேன் என்னை ஞாபகம் இருக்கா ?

நான் முன்பு பழய பள்ளியாக நல்லா இருந்தேன். 15 வருடத்திற்க்கு முன்பு நம்ம ஊரில் புஹாரி சரிபு மஜ்லிஸ் ஆரம்பித்தார்கள் அப்போது ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அதிராம்பட்டினத்தை சேர்ந்த லத்திப் ஆலிம்சா தலைமையில் ஒன்று கூடி என்னை இடித்து விட்டு புதியதாக கட்டுவதற்க்கு பல வருடத்திற்க்கு முன்பு முடிவு செய்து என்னை இடித்து விட்டு என்னை புதியதாக கட்ட ஆரம்பித்தார்கள்.

எனக்காக வெளிநாடுகளுக்கு எல்லாம் சுற்று பயணம் செய்து பணம் வசூலித்தார்கள். ஆனால் இன்று வரை என் நிலமை என்னா என்று உங்களுக்கு தெரியும்.

யாரவது என்னை பற்றி நினைத்து பார்த்திங்களா.

உங்க விட்டு கல்யாணத்திற்க்கு மட்டும் என்னை பயன்படுத்துகிறிர்கள் ( நிக்காஹ் செய்ய, விருந்து வைக்க ) என்னை முழுமையாக கட்டி முடித்து எப்போ திறப்புவிழா என்று யாரவது நினைத்து பார்த்திங்களா.

எனக்கு பின்னால் சில வருடத்திற்க்கு பிறகு ஆரம்பித்த பள்ளிகள் எல்லாம் புதியதாக கட்டப்பட்டு திறப்பு விழாவும் நடந்து விட்டன. ( உதரணம் : மக்கா பள்ளி, நூர் பள்ளி, ரஹ்மத் பள்ளி, ) இப்போ ஆரம்பித்த கொத்பா ஜூம்மா பள்ளி கூட அனைத்து வேலைகளும் முடியப்போகிறது. நான் மட்டும் இன்னும் கட்டட பனிகள் முடிக்கமல் எப்போ திறப்புவிழா நடக்கும் என்று எதிர்பார்க்கிறேண்.

போன வருடம் என் பள்ளியில் உள்ள ஒரு கப்ருவை சிலர் கொஞ்சம் இடித்து விட்டார்கள் அதற்க்கு கோபப்பட்ட சில அவ்லியாக்கலின் நல்லடியார்கள் போலிஸில் கேஸ் கொடுத்து அதை பெரிய பிரச்சனை ஆக்கினார்கள் அதன் பிறகு அந்த கப்ருவை மறுபடியும் நன்றாக கட்டி அதற்க்கு பாதுகாப்பு வேலியும் போட்டார்கள்.

ஆனால் நான் பல வருடம் இப்படி இருப்பதை அவர்கள் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிரார்கள். அல்லாவின் பள்ளிவாசலான என்னை விட அவர்களுக்கு அவ்லியாக்களின் கப்ரு தான் அவர்களுக்கு முக்கியமாக போய்விட்டது.

உங்களுக்காவது தெரியுமா எனக்கு எப்போ திறப்பு விழா என்று ? ? ? ?

எவர் அனுவளவும் நண்மை செய்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார்
எவர் அனுவளவும் திமை செய்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார் - அல் குர்ஆன்

* என்னை இந்த நிலமைக்கு ஆளாக்கியவர்களுக்கு நாளை அல்லாவிடம் கடுமையானா வேதனை உண்டு அல்லாவை அஞ்சிக்கொள்ளூங்கள்

இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. - அல் குர்ஆன் 2: 114


மேலும், "எவரொருவர் தொழுவதற்காகப் பள்ளிவாசலை உண்டாக்கினாரோ அவருக்கு மறுமையில் (சுவர்க்கத்தில்) அல்லாஹ் மாளிகையை ஏற்பாடு செய்துள்ளான்" என்பது நபிமொழியாகும்.


இப்படிக்கு

குட்டியார் ஜூம்மாப்பள்ளி

visit : www.muthupet.org

Thursday, July 23, 2009

திமுக‌ என‌க்கு முழு உரிமை த‌ந்துள்ள‌து


திமுக‌ என‌க்கு முழு உரிமை த‌ந்துள்ள‌து
ம‌ன‌ம் திற‌க்கிறார் வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் அப்துர் ர‌ஹ்மான் ( ச‌ம‌ர‌ச‌ம் ஜுலை 16 31 )



* உங்களின் இளமைக்காலம், பெற்றோர், படிப்பு ஆகியன குறித்து சொல்லுங்களேன்...
காயிதே மில்லத் (ரஹ்) அவர்களோடும் சிராஜுல் மில்லத் அப்துல் சமத் அவர்களோடும் என் தகப்பனாருக்கு நெருக்கமான தொடர்பு இருந்ததுண்டு. என்னுடைய பாட்டனாரும் முஸ்லிம் லீகில் ஆரம்பக் காலத்திலிருந்தே ஈடுபாடு கொண்டவர். ஆக என்னுடைய பரம்பரையே முஸ்லிம் லீக்குடன் ஈடுபாடு கொண்டு இருந்ததால் சிறு வயதிலிருந்தே எனக்கும் முஸ்லிம் லீக் மீது ஈடுபாடு இருந்தது. சமூக, அரசியல் ரீதியாக சமுதாயத்தை சரியான பாதையில் முஸ்லிம் லீக்கால் மட்டுமே செலுத்த முடியும் என்பது சிறுவயதிலிருந்தே என் எண்ணத்தில் பதிந்த ஆழமான அழுத்தமான நம்பிக்கை. அந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும், வலிமைப்படுத்த வேண்டும் எனும் எண்ணம் இருந்தாலும் கூட ஆங்காங்கே உள்ள பலவீனங்கள் முஸ்லிம் லீக் வளர்ச்சியிலே சில பாதிப்புகளை உண்டாக்குகின்றன. அதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். பலவீனங்கள் இருக்கின்றன என்பதனால் நாம் ஒரு மாற்று அமைப்பை ஏற்படுத்தி விட முடியாது.
என்னுடைய படிப்பு என்பது என்னுடைய பாட்டனார் துவக்கி வைத்த ஆரம்பப் பள்ளியில் 1 முதல் 5 வது வரை படித்தேன். என்னுடைய சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை. ஒரு காலத்தில் நம்மவர்கள் படிப்பதற்கு என்று தனியாக பள்ளி இல்லாத காலத்தில் மதரஸதுல் முஹம்மதிய்யா என்ற ஆரம்பப் பாடசாலையை மார்க்கக் கல்வி போதனையோடு என்னுடைய பாட்டனார் அரசாங்க அங்கீகாரத்தோடு ஆரம்பித்தார். அந்தப் பள்ளியில்தான் நான் 1 முதல் 5 வரை முடித்தேன். இப்பொழுது அந்தப் பள்ளியின் பொருளாளராக நான் இருக்கிறேன். அதன் பிறகு ஆக்கூர் ஓரியண்டல் பள்ளியில் 6 முதல் 10 வரை என்னுடைய படிப்பை முடித்தேன். பிறகு கல்லூரிப் படிப்பு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில். மாஸ்க் ஹாஸ்டல் என்று சொல்லப்படுகிற ஏழை மாணவர்கள் அதிகமாகத் தங்கிப் படிக்கிற விடுதியில் தங்கிப் படித்தேன். அங்குதான் என்னுடைய பட்டப் படிப்பையும் முதுகலை படிப்பையும் முடித்தேன்.
* நீங்கள் சிறுவயதிலிருந்தே முஸ்லிம் லீக்குடன் இணைந்து இருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது முஸ்லிம் லீக்கில் இளைஞர்களே இல்லை எனச் சொல்லப்படுகிறது, இது சரியா?
இல்லை; இது தவறான கருத்து. அந்தந்தப் பகுதிகளில் அமைப்பை வழி நடத்தக் கூடியவர்களின் பலவீனங்களால் சில இடங்களில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. சில பகுதிகளில் முஸ்லிம் லீக் நல்ல வலிமையோடு இருக்கும். சில பகுதிகளில் நடுத்தரமாக இருக்கும். சில பகுதிகளில் பலவீனமாக இருக்கும். சில பகுதிகளில் கிளை கூட இல்லை என்பதை நாம் மறுக்க முடியாது. உடனே தலைமையைக் குறை சொல்லி விட முடியாது. அந்தந்தப் பகுதிகளில் பொறுப்பாளர்களின் வீரியத் தன்மையைப் பொறுத்து அமைப்பின் செயல்பாடுகளின் வலிமை இருக்கும். இளைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள் எல்லாரும் முஸ்லிம் லீகில்தான் இருக்கிறார்களா என்றால் இல்லை. மற்ற இயக்கங்களில் இளைஞர்கள் இருந்தாலும் கூட அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். வீரமாகச் செயல்பட வேண்டும், புரட்சியாகச் செயல்பட வேண்டும் என்றெல்லாம் கூறி நல்லிணக்கத்தைக் குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய இயக்கங்கள் இளைஞர்களை சரியாக வழிநடத்தவில்லை என்பதை உணர்ந்து சமுதாயப் பணி ஆற்ற சரியான களம் முஸ்லிம் லீக்தான் என்பதை உணர்ந்து பல இளைஞர்கள் முஸ்லிம் லீக்கில் இணைந்து கொண்டும் இருக்கிறார்கள்.
* வேலூர் தொகுதியின் வேட்பாளராக முதலில் பேராசிரியர் காதர் மொய்தீன் பெயர்தான் அறிவிக்கப்பட்டது. பிறகு உங்கள் பெயரை அறிவித்தார்கள். உண்மையில் என்ன நடந்தது?
இதில் ஒன்றும் இரகசியம் இல்லை. செயற்குழு கூட்டத்தில் "கடந்த முறை வேட்பாளராக நின்று 5 ஆண்டுகள் பணி ஆற்றினேன். ஆனால் இந்த முறை என்னால் வேட்பாளராக நிற்க முடியாது. நமது கட்சியின் சார்பாக புதிய வேட்பாளர் ஒருவரை அறிமுகம் செய்ய வேண்டும்' என்று பேராசிரியர்தான் முன்மொழிந்தார்.
ஆனால் செயற்குழுவில் வந்த அனைவரும் ஒட்டுமொத்தமாக நீங்கள்தான் மறுபடியும் நிற்க வேண்டும் என்று வற்புறுத்தியதால் பேராசிரியர் அவர்கள் மனமின்றி ஒப்புக் கொண்டார்.
அதன் பிறகு பேராசிரியருக்கு ஏணி சின்னத்தில்தான் அதாவது சொந்தச் சின்னத்தில்தான் நிற்க வேண்டும். வேறு கட்சியின் சின்னத்தில் நிற்பதை மாற்றியாக வேண்டும் என்பது முஸ்லிம் லீக்கில் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. அத்தகைய நிலையில் பேராசிரியர் ஏணி சின்னத்தில் நிற்பார் என்று அறிவித்து இருந்தோம்.
ஆனால் இரண்டு காரணங்களால் இந்த முடிவு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. 1. ஏணி சின்னம் என்பது மக்கள் மனதில் ஒரு சுயேட்சை சின்னம்தான் என்றிருக்குமே தவிர அது முஸ்லிம் லீக்கின் சின்னம் என்று பதிய வைக்க முடியாது. இந்தச் சின்னத்தை பஞ்சாயத்து தேர்தல், நகராட்சி, மாநகராட்சி தேர்தல், சட்டமன்றத் தேர்தல் எனப் படிப்படியாக கொண்டு வந்து அதன் பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கலாமே தவிர திடீரென பாராளுமன்றத் தேர்தல் என்ற மிகப் பெரிய சமுத்திரத்தில் கொண்டு சென்று நிற்பது என்பது சொந்தச் சின்னத்தில் நின்றோம் என மார் தட்டிக் கொள்ளலாமே தவிர நமது இலக்கான பிரதிநிதித்துவத்தை இழந்து விடுவோமோ என்ற கவலையும் பலருக்கு இருந்தது.
இத்தகைய நிலையில் உதயசூரியன் சின்னத்தில் நிற்போம் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் பேராசிரியர் அவர்கள் முஸ்லிம் லீக்கின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக இருப்பதனால் அவர் வேறு கட்சியின் சின்னத்தில் நிற்க முடியாது. இத்தகைய நிலையில் மாநில செயற்குழு மீண்டும் கூடி என்னை வேட்பாளராக்குவது என்றும் உதயசூரியன் சின்னத்தில் நிற்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
* திமுக சின்னத்தில், திமுக உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நீங்கள் ஒரு முஸ்லிம் லீகராக செயல்பட முடியுமா?
நிச்சயமாக முடியும். முஸ்லிம் லீக்கின் உறுப்பினராக நாடாளுமன்றத்தில் முழுமையாகச் செயல்படக் கூடிய உரிமையை திமுக தந்திருக்கிறது. திமுகவே வெளியிடுகின்ற அறிக்கைகளில் கூட முஸ்லிம் லீக் வேட்பாளர் என்றுதான் சொல்கின்றார்களே தவிர, திமுக வேட்பாளர் என்று சொல்லவில்லை. அத்தகைய அங்கீகாரத்தை அவர்கள் தருகிறார்கள். நாடாளுமன்றத்தில் நம்முடைய குரல்கள் ஒலிப்பதற்கு திமுக எத்தகைய இடர்பாடும் செய்வதில்லை. நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களுடன் பேசும் பொழுதும் கூட சிறுபான்மை சமுதாயத்தின் விஷயங்களை முழுமையாக எடுத்து வைக்கும்படியும் அதில் எந்தத் தயக்கமும் காட்ட வேண்டாம் என்றும் அவர்களே சொல்கிறார்கள். அதனடிப்படையில் சமுதாயத்தின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கக் கூடிய விதத்தில் என்னுடைய பணி தொடரும்.
* தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற எதிர்பார்ப்பு இருந்ததா?
நிச்சயமாக. தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது. அதற்குக் காரணம் தொடர்ந்து அந்தத் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் நல்லவர்கள்; ஒழுக்கமானவர்கள்; சராசரி அரசியல்வாதி போல் செயல்பட மாட்டார்கள்; ஆக்கபூர்வமான அரசியல் செய்பவர்கள் என்ற கருத்து தொகுதி மக்களிடையே இருக்கிறது. அதே போன்று தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் அரசு செய்திருக்கிற சாதனைகள் ஏழை எளிய அடித்தள மக்களிடம் சென்று சேர்ந்திருக்கின்றன. அவற்றை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்கள் முன்னால் தேர்தலில் ஒரு சவால் என்று வருகின்ற பொழுது ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற உந்துதல் மக்களிடம் இருந்துள்ளது. ஆக இந்த இரண்டு காரணங்களாலும் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை என்னுள் இருந்தது.
* தேர்தலில் உங்களுக்குக் கிடைத்த சமுதாய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?
அந்தத் தொகுதியைப் பொறுத்தவரை சமுதாயத்தின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருந்தது. எத்தகைய நிலையிலும் சமுதாயத்தின் எண்ணங்கள் மாறுபட்டு இருக்கவில்லை. இத்தனைக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு சமுதாயத்தினரின் வாக்குகள் இந்தத் தேர்தலில் எனக்குக் கிடைத்துள்ளன. முஸ்லிம் சமுதாயத்தின் விழுக்காடு 13 முதல் 15 சதவீதம் மட்டுமே. சமூக ரீதியாகத் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்று இந்தத் தேர்தலில் நிரூபணமாகியுள்ளது. அதனடிப்படையில் நமது உணர்வுகளை மதிக்கக் கூடிய, கூட்டணி தர்மத்தைப் பேணக் கூடிய எந்தத் தலைமை இருக்கின்றதோ அத்தகைய தலைமையோடு ஒத்துப் போய் சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் நமது பிரதிநிதித்துவத்தை எப்படி அடைய முடியுமோ அப்படி அடைய சிந்தித்துச் செயல்படக் கூடிய தலைவர்களால் மட்டுமே சமுதாயத்தை வழிநடத்த முடியும். அந்த வகையில் முஸ்லிம் லீக் தன்னுடைய பணியைச் சரிவர நிறைவேற்றி இருக்கிறது என்ற திருப்தி எனக்கு இருக்கிறது.
* வேலூர் தொகுதியின் முன்னேற்றத்திற்காக என்னென்ன திட்டங்கள் தீட்டியுள்ளீர்கள்? எந்தத் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள்?
வேலூர் நாடாளுமன்ற தொகுதி ஏழை மக்கள் அதிகம் வாழக் கூடிய தொகுதி. இன்னும் பல துறைகள் தன்னிறைவு பெறாத தொகுதி. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்த முடியுமோ அத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அதனடிப்படையில் முதலாவதாக குடிநீர்த் திட்டம், அடுத்து சுகாதார வசதி, மருத்துவமனை, அடுத்து சாலை மேம்பாடு, அடுத்து கல்வித்துறை. கல்வி நிலையங்களை ஏற்படுத்துவது, புதிய கல்லூரிகள், கல்வி நிறுவனங்களின் விரிவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் செயலாற்றத் திட்டமிட்டுள்ளேன். மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையுடன் நம் சமுதாயப் பிரமுகர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆகியோரின் ஆலோசனைப்படி எந்தெந்தத் திட்டங்களுக்கு முன்னுரிமை தந்து செயல்பட முடியுமோ அதன்படி இன்ஷா அல்லாஹ் செயல்படுவேன்.
* நீங்களே ஒப்புக் கொண்டீர்கள், வேலூர் தொகுதி ஏழை மக்கள் அதிகம் வாழும் தொகுதி என்று! கடந்த 60 ஆண்டுகளாக வேலூர் மாவட்டத்தில் ஏராளமான பீடித் தொழிலாளர்கள் மருத்துவம் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் வறுமையிலும் நோயிலும் வாடி வருகிறார்கள். அவர்களின் கல்வி பொருளாதார மறுவாழ்விற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
பீடித் தொழிலாளர்களின் நிலை உடனடியாக மாற வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டாலும் கூட அதனைத் தொடர்ந்து குலத் தொழிலாகச் செய்து வருபவர்களுக்கு மத்தியில் உடனடி மாற்றம் கொண்டு வருவது இயலாததாகும். பீடித் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு என்னென்ன நலத்திட்டங்கள் கொண்டு வர முடியுமோ அவற்றைக் கொண்டு வர முயற்சி செய்வேன். அவர்களின் நிலை மேம்பாடு அடைய அவர்களின் குழந்தைகள் கல்வியறிவு பெற வேண்டும். அதன் மூலம் மட்டுமே அவர்களின் நிலை மேம்பாடு அடையும். பொருளாதாரத் தீர்வு என்பதெல்லாம் அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல், அவரவர் நிலைகளுக்கு ஏற்றாற் போல மாறுபடும். ஆக பொருளாதார முன்னேற்றம் என்பதெல்லாம் ஒரு தற்காலிகத் தீர்வாகுமே தவிர அரசாங்கமே முன்வந்து ஏதேனும் நலத்திட்டங்களை வழங்கி கடனுதவிகள் வழங்கி செயல்பட்டாலும் உடனடியாக அவர்களுடைய வாழ்வில் ஒரு முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியாது. இதற்கு ஒரே தீர்வு பீடித் தொழிலை குலத் தொழிலாகச் செய்து கொண்டு வருகின்ற குடும்பங்களின் பிள்ளைகள் பள்ளிக் கல்வியை முடித்து மேல்படிப்பு கற்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். பீடித் தொழிலாளர்களின் குடும்பங்
களில் கல்வி விழிப்பு உணர்வை ஏற்படுத்தி அவர்கள் குடும்பங்களில் படித்த பட்டதாரிகள் வெளிவந்து கொண்டே இருக்கிறார்கள் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய ஆவல். இந்த ஆவலைப் பூர்த்தி செய்ய முழு கவனம் செலுத்துவேன். இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு வீடாக படித்தவர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். தனிப்பட்ட முறையில் என்னால் ஒவ்வொரு வீடாகச் செல்ல முடியாவிட்டாலும் கூட அந்தந்தப் பகுதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக பீடித் தொழிலாளர்கள் குடும்பங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு படித்தோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படும். அதற்காக நானும் துஆ செய்கிறேன். நீங்களும் துஆ செய்யுங்கள்.
* உள்ளூர் வேட்பாளரையே தேர்தலுக்குப் பிறகு பார்ப்பது அரிதாகி விட்ட இன்றைய அரசியல் சூழலில் வெளியூர்க்காரரான நீங்கள் உங்கள் தொகுதி மக்களின் மனக்குறையை எப்படிப் போக்குவீர்கள்?
வேலூர் மக்களைப் பொறுத்தவரையில் உள்ளூர்க்காரரா வெளியூர்க்காரரா என்று பார்ப்பதில்லை. நல்ல எண்ணத்துடன் திறம்படச் செயலாற்றுகிறார்களா என்றுதான் பார்க்கிறார்கள். அதனடிப்படையில் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்கள். தொகுதி மக்கள் என்னை நேரடியாகச் சந்திப்பதற்கும் அவர்களின் கோரிக்கைகளையும் மனுக்களையும் பெறுவதற்கு வேலூரிலே அலுவலகம் அமைத்து, அதிகப்படியான நேரம் தொகுதியிலே இருப்பதற்கும், தொகுதி முழுவதும் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்வதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தொகுதி மக்களின் மனக்குறையை முழுமையாகப் போக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது; என் தொகுதி மக்களுக்கும் இருக்கிறது.
* வக்ஃபு வாரியத்தின் புதிய தலைவராக கவிக்கோ அப்துர் ரஹ்மான் நியமிக்கப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்கள் நல்லவர். சிறந்த மனிதர். சமுதாயம் அனைத்துத் துறைகளிலும் குறிப்பாக கல்வித் துறையில் வளர்ச்சி அடைய வேண்டும் என அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாராட்டப்படக் கூடியவை. அதனடிப்படையில் வக்ஃபு வாரியத்தின் தலைவராகத் திறம்படச் செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருடைய பணிகள் சிறப்பாக அமையும்.
* வக்ஃபு வாரியத்தின் பணிகளை மேம்படுத்த நீங்கள் சொல்லும் ஆலோசனை என்ன?
ஆலோசனை சொல்லும் அளவுக்கு எனக்கு அனுபவம் கிடையாது. கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்களின் அனுபவங்களை வைத்துப் பார்க்கும் போது நாம் எல்லாம் தெரிந்து கொள்ளும் அளவிற்கு அவருடைய பணிகள் பட்டறிவுடனும் சிறப்பாகவும் அமையும்.
* சமுதாயத்தில் ஒற்றுமை மலர என்ன செய்ய வேண்டும்?
சமுதாயத்தில் சிதறிக் கிடக்கின்ற அமைப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு தலைமையின் கீழ், ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். அப்படிச் செயல்பட்டால்தான் சமுதாயத்திற்குக் கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளும் பிரதிநிதித்துவமும் முழுமையாகக் கிடைக்கும். நாளுக்கு நாள் சிதறுண்டு போவதனால் நமக்குக் கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவம் பறிபோய்க் கொண்டிருக்கிறது என்ற கசப்பான உண்மையை சமுதாயத் தலைவர்கள் உணர வேண்டும். சிதறிப் போயிருக்கின்ற சமுதாயத்தின் தலைவர்கள் எல்லாம் ஏதோ தங்களையும் சமுதாயத்தின் பிரதிநிதியாகக் கருதிக் கொண்டு தாமும் ஏமாந்து சமுதாயத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சமுதாயத்தின் சக்தி நாளுக்கு நாள் வீணாகிக் கொண்டிருக்கிறது என்கிற கவலை சமீப காலமாக எனக்கு அதிகரித்து உள்ளது. ஆகவே, சிதறிப் போய் இருக்கிற சமுதாயத்தை ஒன்றிணைக்க நான் கடுமையான முயற்சி எடுத்து இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் இனிமேலும் சமுதாயத்தை ஒன்றிணைக்கத் தொடர்ந்து பாடுபடுவேன்.
* சார்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; மாற்று அரசியலுக்கு வழி காண வேண்டும் என ம.ம.க. இந்த தேர்தலில் களம் இறங்கி படுதோல்வி கண்டுள்ளது. இது குறித்து...?
இந்தத் தோல்வி குறித்து மிகவும் கவலைப்படுகிறேன். தமுமுகவின் மாநிலத் தலைவர், பொதுச் செயலாளர், மேலிடப் பிரதிநிதிகள் ஆகியோருடன் எனக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக ம.ம.க. அறிவிக்கப்பட்ட உடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எப்படியும் ஒரு சீட் கிடைக்கும் என்ற சந்தோஷம் எனக்கு இருந்தது. ஆனால் சிறு சிறு விஷயங்களைப் பெரிதாக்கிக் கொள்வதனால் நமது பிரதிநிதித்துவம் என்கிற இலக்கை அடைவதில் பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்றுதான் நினைக்கிறேன். ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் கிடைக்கப் பெற்ற ஒரு தொகுதியினைக் கையகப்படுத்தி இருந்தால் முஸ்லிம் சமுதாயத்தின் இன்னும் ஒரு வேட்பாளர் இன்று நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்திருப்பார். இனி வருகின்ற காலத்தில் அந்த இயக்கத்தின் தலைவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் சமுதாயத்தின் இயக்கங்கள் எல்லாம் ஒன்றிணைந்து நமது இலக்கான பிரதிநிதித்துவத்தை அடைவதற்கு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
* நீங்கள் பணியாற்றும் இஸ்லாமிய வங்கி குறித்து கூறுங்களேன்?
இஸ்லாமிய வங்கி என்பது ஏதோ முஸ்லிம்களுக்கான வங்கி என யாரும் நினைத்து விடக் கூடாது. அப்படி நினைத்தால் அது தவறு. பொருளாதாரச் சுரண்டலில் இருந்தும், வட்டிக் கொடுமையிலிருந்தும் அனைத்துத் தரப்பு மக்களையும் காப்பாற்றும் ஒரு சிறந்த, பொருளியல் திட்டம்தான் இஸ்லாமிய வங்கி முறை. இந்த வங்கி முறையே மிகச் சிறந்தது என உணர்ந்து மிகப் பெரிய பொருளாதார வல்லுநர்களால் அங்கீகரிக்கப்பட்டு, முஸ்லிம் நாடுகளையும் தாண்டி இப்பொழுது மேலை நாடுகள் கூட இதனை ஏற்று நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த வங்கி முறை இந்தியாவில் வர வேண்டும் என்று கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இப்பொழுது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முன்னாள் மாநிலத் தலைவர் ஹெச். அப்துர் ரகீப் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அரும் பாடுபட்டு வருகிறது.
1987இல் ராமகிருஷ்ண ஹெக்டே கர்நாடக மாநில முதல்வராக இருந்த போது அவருக்கு இஸ்லாமிய வங்கி குறித்து எடுத்துச் சொல்லி இருக்கிறேன். ரிசர்வ் பேங்க் அதிகாரிகளுக்கும் இது குறித்து விளக்கி இருக்கிறேன். ஆனால் துரதிருஷ்டவசமாக இஸ்லாமிய வங்கி முறை வந்து விடக் கூடாதென அதிகாரிகள் சிலர் செயல்பட்டதால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால் இப்பொழுது இருக்கக் கூடிய காங்கிரஸ் தலைமையிலான அரசு இஸ்லாமிய வங்கி முறையை செயல்படுத்துவதற்கு முயற்சி செய்யும் என முழுமையான எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த வகையில் அப்துர் ரகீப் அவர்களின் தலைமையிலான குழுவுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையை நடைமுறைப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்வேன்.
* கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக சச்சார் குழு அளித்துள்ள பரிந்துரைகள் செயல்வடிவம் பெற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எனும் முறையில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
எந்தத் துறை சார்ந்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டாலும் அதில் சமூக ரீதியாக சச்சார் குழு பரிந்துரைகள் செயலாக்கம் பெற தொடர்ந்து பாடுபடுவேன். பல மாநிலங்களிலிருந்து அகில இந்திய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் 29 பேரையும் ஒன்றிணைத்து சச்சார் கமிட்டி பரிந்துரையை அமலாக்குவதற்கான அவசியத்தை அவர்களிடம் விளக்கி அதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவேன். இது குறித்து ஏற்கெனவே காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சதீதுத்தீன் உவைசி எம்.பி. இலட்சத்தீவு எம்.பி. ஆகியோரிடம் விவாதித்து இருக்கிறேன். இதனடிப்படையில் அடுத்த 3, 4 மாதங்களுக்குப் பிறகு முஸ்லிம் எம்.பி.க்களின் குழு சமூக நீதியை வலியுறுத்தியும் மதநல்லிணக்கத்திற்காகவும் சிறுபான்மையினரின் உரிமைகளை மீட்பதற்கும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். இத்தகையக் கருத்தோட்டம் அனைத்து எம்.பி.க்களிடமும் காணப்படுகிறது. செயல்பாடுகளை வருகின்ற காலத்தில் காண்பீர்கள்.
* நீங்கள் வேலூர் தொகுதி எம்.பி. ஆக இருந்தாலும் ஒட்டுமொத்த சமுதாயமும் உங்கள் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து வருகிறது என்பதை உணருகிறீர்களா?
நான் பெருமையாகக் கருதுகிறேன். அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் நான் ஒரு முஸ்லிம் லீக் உறுப்பினராக இருந்தாலும் கூட ஒட்டுமொத்த சமுதாயத்தின் பிரதிநிதியாகத்தான் நாடாளுமன்றத்தில் நுழைந்திருப்பதாக உணருகிறேன். அத்தகையக் கடமையும் உணர்வும் எனக்கு உண்டு. எந்த ஒரு பாகுபாடும் இன்றி இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் வலுப்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் முஸ்லிம்களால் மட்டுமே இட்டுச் செல்ல முடியும் என்ற வரலாற்றை உண்மைப்படுத்தும் வகையில் என்னுடைய செயல்பாடுகள் அமையும்.
* "சமரசம்' 30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது...
மிகுந்த மகிழ்ச்சி. 30 ஆண்டுகளாக சமுதாயப் பணி ஆற்றிக் கொண்டிருக்கிற சமரசத்திற்கும் சமரசக் குழுவிற்கும் வாழ்த்துகள். நான் சமரசத்தோடு மிகவும் சமரசமானவன். சமரசத்தைப் பொறுத்தவரையில் சொல்ல வேண்டிய விஷயத்தை யார் மனதும் புண்படாமல் வெளியிடுகிறீர்கள். இன்று ஆர்எஸ்எஸ்ஸும் பிஜேபியும் கூட பயன்படுத்தாத வார்த்தைகளை இன்று இருக்கக் கூடிய முஸ்லிம் வாராந்
திரப் பத்திரிகைகள் ஒருவரையொருவர் அவமானப்படுத்துவதற்கும் கேவலப்படுத்துவதற்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிற நேரத்தில் சமரசம் ஒரு நல்ல சமூகப் பணி ஆற்றிக் கொண்டிருக்கிறது. "சமரசம்' வீட்டிற்கு வந்து விட்டது என்றால் அதை நாம் படிப்பதற்கு முன்பாக முஸ்லிம் அல்லாதவர்களுக்குத் தரக் கூடிய ஒரு நன்மதிப்பை சமரசம் பெற்றுள்ளது. சமரசப் பணிகள் தொடர என்னுடைய வாழ்த்துகள்.
சந்திப்பு : M. முஹம்மது கவுஸ்


ந‌ன்றி : ச‌ம‌ர‌ச‌ம் மாத‌மிருமுறை இத‌ழ்
ஜுலை 16 31, 2009
விரைவில் www.samarasam.net