Thursday, March 26, 2009

முத்துப்பேட்டை அப்துர் ரஹ்மான் பேச்சு மனித நேய பேரியக்கமே முஸ்லிம் லீக்


மனித நேய பேரியக்கமே முஸ்லிம் லீக் துபை அப்துர் ரஹ்மான் பேச்சு
சாதி மதம் வேறுபாடு பார்க்காமல் அனைவருக் காகவும் உழைக்கும் மனித நேய பேரியக்கமே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த தின பெருவிழா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 61ம் ஆண்டு துவக்க விழா,உலமாக்கள் நல வாரியம் அமைத்த தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா காஞ்சிபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தாம்பரத்தில் 20-03-2009 அன்று நடை பெற்றது.

இந்தக் கூட்டத்தில் காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் துபை. அப்துர் ரஹ்மான் உரையாற்றினார்

அப்போது அவர் குறிப் பிட்டதாவது:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்லிம் மக்களுக்காக மட்டுமல்லாமல் அனைத்து சமூக மக்களுக்கும் அரும் தொண்டாற்றி வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சேவையை உணர்ந்தவர்கள் அதனை வாழ்த்தி வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர். அது வளர பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைகளுக்காக பாடுபடும் அதே நேரத்தில் பிற சமுதாயத்தினரின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயல்படும் இயக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பெருமையை உலகம் முழுவதும் பரவலாக்கும் வகையிலேயே வெளிநாடுகளிலே வேலை பார்க்கும் எங்களைப் போன்றவர்கள் அங்கும் காயிதே மில்லத் பேரவை என்ற பெயரி லேயே முஸ்லிம் லீகின் பணிகளை செய்து கொண்டிருக்கின்றோம்.

முன் பின் தெரியாதவர்களுக்குக் கூட சாதி, மதம், மொழி, வேறுபாடு பார்க் காமல் அனைவருக்கும் சேவையாற்றும் மனித நேய பேரியக்கமாக முஸ்லிம் லீக் திகழ்ந்து வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்திலே நடந்த ஒரு உண்மை சம்பவம் முஸ்லிம் லீகின் மனித நேய செயல்களுக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

சில வாரங்களுக்கு முன்பாக துபையில் இருந்த எனக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. பேசியவர் இந்தியாவில் இருந்து பேசுவதாகவும் தனது பெயர் 'காந்த் என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது சகோதரி 'தேவி என்பவர் பணியாற்றி வந்ததாகவும் எதிர் பாராத வகையில் அங்கே அவர் இறந்து விட்டதாகவும் அவரது உடலினை பெற்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்க உதவும்படி எங்களிடம் கோரிக்கை வைத்தார்.

தான் பல வகையிலும் விசாரித்த வகையில் துபையில் காயிதே மில்லத் பேரவை என்ற அமைப்பு தான் எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாமல், சாதி, மத வேறு பாடில்லாமல் இந்திய மக்கள் அனைவருக்கும் சிறப்பான சேவை செய்து வருவதை கேள்வி பட்டதால் உங்களின் உதவியை நாடியுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்று சம்பந்தப் பட்டவரின் சகோதரியின் உடலினை பெற்று முறைப்படி செய்ய வேண்டியவற்றை செய்து இந்தியா விற்கு அனுப்பி வைத்தோம்.

இந்தியாவுக்கு வந்த அந்த சடலத்தினை பெற்றுக் கொண்ட அவர் மீண் டும் எங்களை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் கூறினார் நான் இவ்வளவு காலமாக இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் மிகவும் தவறான எண்ணம் கொண்டிருந்தேன். பல முறை இழித்தும் பழித்தும் கேவலமான முறையில் பேசியிருக்கிறேன். ஆனால், இப்பொழுது முஸ்லிம்களுடைய மனித நேய பண்பை ஜாதி மதம் பார்க்காமல் உதவும் பெரும் தன்மையை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டேன். இத்துனை நாட்களாக எனது மனதில் ஆழமாக பதிந்திருந்த முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வு என்னை விட்டு முற்றிலுமாக அகன்றுகொண்டிருக்கின்றது. உங்களுடைய இந்த மனிதநேய பணி வளர கடவுளை வேண்டிக் கொள்கின்றேன். என்பதாக மிகவும் உருக்கத்துடன் அவர் எங்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இத்தகைய மாண்புடைய மனிதநேயத்தை சிறு வயதிலிருந்தே எங்களுக்கு ஊட்டிய இயக்கம் முஸ்லிம் லீக்.

இது போன்ற அரிய பல காரியங்களை அனைத்து மக்களுக்காகவும் செய்து வரும் இயக்கம்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். இந்த இயக்கம் எங் கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் அமைதியும் சமாதானமும், நல்லிணக் கமும் வளரும். இந்த இயக் கம் நல்ல முறையில் வளர்ந்து அனைத்து மக்க ளுக்கும் பாடுபட அனைவரும் உழைக்க வேண்டும். அதுவே மனித நேயம் என்று சொல்லத் தகுந்த செயலாக இருக்க முடியும்.

இவ்வாறு காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் துபை. அப்துர் ரஹ்மான் பேசினார்