Tuesday, June 2, 2009

முத்துப்பேட்டையில் பரபரப்பு (கோயில் திருவிழாவில் தகராறு வீடு புகுந்து வாலிபருக்கு அடி, உதை)

முத்துப்பேட்டையில் பரபரப்பு
கோயில் திருவிழாவில் தகராறு வீடு புகுந்து வாலிபருக்கு அடி, உதை


முத்துப்பேட்டை, ஜூன் 2:முத்துப்பேட்டை கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக வீடு புகுந்து வாலிபருக்கு அடி,உதை விழுந்தது. இதுதொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடிவருகின்றனர்.

முத்துப்பேட்டை அருகே பேட்டையில் உள்ள சிவன் கோயில் திருவிழா கடந்த 31ம் தேதி துவங்கியது. 2ம் நாளான நேற்றிரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதைபார்ப்பதற்காக இதே ஊரைச்சேர்ந்த நவாஷ்கான் மற்றும் அவரது நண்பர்கள் 10பேர் நேற்று சிவன்கோயிலுக்கு வந்தனர். அப்போது அவர்கள் ஆடி, பாடி அதிக சத்தம்போட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அருகில் நின்றிருந்த இதே ஊரைச்சேர்ந்த ராஜவர்மன்(20) சத்தம்போடாமல் பார்க்கும்படி கூறினார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.


அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டுக்கு வந்த நவாஷ்கான் தனது நண்பர்களுடன் நேற்றிரவு ராஜவர்மன் வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கினர். இதில் படுகாயமடைந்த ராஜவர்மன் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்த மன்னார்குடி டிஎஸ்பி (பொறுப்பு) குணசேரகன் சம்பவ இடத்துக்கு பார்வையிட்டு விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னசாமி, எஸ்ஐ தேவகி ஆகியோர் வழக்கு பதிந்து நவாஷ்கான் மற்றும் அவரது நண்பர்களை தேடிவருகின்றனர். இதனால் கோயில் திருவிழாவில் பதற்றம் ஏற்பட்டது.

தமிழ் முரசு 02.06.2009

திருச்சி பதிப்பு பக்கம் 7

No comments:

Post a Comment