Sunday, April 26, 2009

வேலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமான் வேட்புமனு ஏற்பு

வேட்புமனு பரிசீலனை: வேலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமான் வேட்புமனு ஏற்பு

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியி டும் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் மனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்டன.

வேலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம்.அப்துல் ரகுமான் மனு ஏற்கப்பட்டது. வடசென்னையில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் தா. பாண்டியனின் மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

15வது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 5 கட்டங் களாக நாடு முழுவதும் நடைபெறுகிறது. இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது. கடைசி கட்டமாக நடைபெறும் தமிழ்நாட்டில் வேட்பு மனுக்கள் ஏப்ரல் 17-ந்தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது.

அ.இ.அ.தி.மு.க. அணியை சேர்ந்தவர்கள் 17-ம் தேதி தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய் திருந்தனர். தி.மு.க. அணியி னர் பெரும்பகுதியினர் 22-ம் தேதி வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். எஞ்சிய அனைவரும் கடைசி தினமான நேற்று தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இன்று மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டன. தேர்தல் ஆணையம் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்ட வகையில் மனுக்கள் இருந்தால் அவைகள் ஏற்கப்படும்.

வேலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் எம். அப்துல் ரகுமானின் மனு பரிசீலனை செய்யப்பட்டது. அதில் எழுப்பப் பட்ட ஆட்சேபணை தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டு அம்மனு ஏற்கப்பட்டது.
அப்துல் ரகுமானின் சார்பில் தலைமைத் தேர்தல் முகவரும், வேலூர் சட்டமன்ற உறுப்பினரு மான ஞானசேகரன், வேட்புமனுவை முன் மொழிந்திருந்த மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் வழக்கறிஞர் முஹம்மது சகி, தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வெ. ஜீவகிரிதரன் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment