Monday, August 3, 2009

அஸ்ஸலாமு அலைக்கும் முத்துப்பேட்டை வாசிகளே....

நான் தான் பேட்டை ரோட்டில் உள்ள குட்டியார் ஜூம்மா பள்ளி பேசுகிறேன் என்னை ஞாபகம் இருக்கா ?

நான் முன்பு பழய பள்ளியாக நல்லா இருந்தேன். 15 வருடத்திற்க்கு முன்பு நம்ம ஊரில் புஹாரி சரிபு மஜ்லிஸ் ஆரம்பித்தார்கள் அப்போது ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அதிராம்பட்டினத்தை சேர்ந்த லத்திப் ஆலிம்சா தலைமையில் ஒன்று கூடி என்னை இடித்து விட்டு புதியதாக கட்டுவதற்க்கு பல வருடத்திற்க்கு முன்பு முடிவு செய்து என்னை இடித்து விட்டு என்னை புதியதாக கட்ட ஆரம்பித்தார்கள்.

எனக்காக வெளிநாடுகளுக்கு எல்லாம் சுற்று பயணம் செய்து பணம் வசூலித்தார்கள். ஆனால் இன்று வரை என் நிலமை என்னா என்று உங்களுக்கு தெரியும்.

யாரவது என்னை பற்றி நினைத்து பார்த்திங்களா.

உங்க விட்டு கல்யாணத்திற்க்கு மட்டும் என்னை பயன்படுத்துகிறிர்கள் ( நிக்காஹ் செய்ய, விருந்து வைக்க ) என்னை முழுமையாக கட்டி முடித்து எப்போ திறப்புவிழா என்று யாரவது நினைத்து பார்த்திங்களா.

எனக்கு பின்னால் சில வருடத்திற்க்கு பிறகு ஆரம்பித்த பள்ளிகள் எல்லாம் புதியதாக கட்டப்பட்டு திறப்பு விழாவும் நடந்து விட்டன. ( உதரணம் : மக்கா பள்ளி, நூர் பள்ளி, ரஹ்மத் பள்ளி, ) இப்போ ஆரம்பித்த கொத்பா ஜூம்மா பள்ளி கூட அனைத்து வேலைகளும் முடியப்போகிறது. நான் மட்டும் இன்னும் கட்டட பனிகள் முடிக்கமல் எப்போ திறப்புவிழா நடக்கும் என்று எதிர்பார்க்கிறேண்.

போன வருடம் என் பள்ளியில் உள்ள ஒரு கப்ருவை சிலர் கொஞ்சம் இடித்து விட்டார்கள் அதற்க்கு கோபப்பட்ட சில அவ்லியாக்கலின் நல்லடியார்கள் போலிஸில் கேஸ் கொடுத்து அதை பெரிய பிரச்சனை ஆக்கினார்கள் அதன் பிறகு அந்த கப்ருவை மறுபடியும் நன்றாக கட்டி அதற்க்கு பாதுகாப்பு வேலியும் போட்டார்கள்.

ஆனால் நான் பல வருடம் இப்படி இருப்பதை அவர்கள் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிரார்கள். அல்லாவின் பள்ளிவாசலான என்னை விட அவர்களுக்கு அவ்லியாக்களின் கப்ரு தான் அவர்களுக்கு முக்கியமாக போய்விட்டது.

உங்களுக்காவது தெரியுமா எனக்கு எப்போ திறப்பு விழா என்று ? ? ? ?

எவர் அனுவளவும் நண்மை செய்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார்
எவர் அனுவளவும் திமை செய்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார் - அல் குர்ஆன்

* என்னை இந்த நிலமைக்கு ஆளாக்கியவர்களுக்கு நாளை அல்லாவிடம் கடுமையானா வேதனை உண்டு அல்லாவை அஞ்சிக்கொள்ளூங்கள்

இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. - அல் குர்ஆன் 2: 114


மேலும், "எவரொருவர் தொழுவதற்காகப் பள்ளிவாசலை உண்டாக்கினாரோ அவருக்கு மறுமையில் (சுவர்க்கத்தில்) அல்லாஹ் மாளிகையை ஏற்பாடு செய்துள்ளான்" என்பது நபிமொழியாகும்.


இப்படிக்கு

குட்டியார் ஜூம்மாப்பள்ளி

visit : www.muthupet.org

No comments:

Post a Comment