Tuesday, August 25, 2009

செப். 15-ல் பட்டுக்கோட்டை பொறியியல் கல்லூரியில் வகுப்புகள் தொடங்கும்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள ராஜாமடத்தில் ரூ. 28.30 கோடியில் கட்டப்பட்டு வரும் திருச்சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், அண்ணா பிறந்த நாளான செப். 15-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்றார் மத்திய நிதித் துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம்.

கல்லூரியில் நடைபெற்று வரும் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவர் மேலும் பேசியது: "தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி தொடங்க முதல்வர் உத்தரவிட்டதன் பேரில், அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் கட்டமாக ரூ. 2.50 லட்சம் மதிப்பில் 6 வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. ரூ. 28.30 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கல்லூரியில் 24 வகுப்பறைகள், 18 பரிசோதனை கூடங்கள், 100 மாணவர்கள் தங்குவதற்கான 16 குடியிருப்பு கட்டடங்கள் கட்டடப்படுகின்றன.

முதலாம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்புக்கு சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய 4 பிரிவுகளில் தலா 60 மாணவர்கள் வீதம் 240 மாணவ, மாணவிகள் சேர்க்கப்படவுள்ளனர்' என்றார் பழநிமாணிக்கம்.

No comments:

Post a Comment