Thursday, May 14, 2009

பிளஸ்டூ ஜூன் மாதம் மறுதேர்வு எழுதலாம்

பிளஸ் 2 தேர்வில் மூன்று அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தோல்வியுற்றவர்களுக்கு வரும் ஜூன் 22ம் தேதி துவங்கும் சிறப்பு துணை தேர்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வில் தவறியவர்கள் வரும் ஜூன் மற்றும் ஜூலையில் நடக்கும் மறுதேர்வில் கலந்து கொள்ளலாம். மூன்று அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தவறியவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும்.

நான்கு பாடங்களுக்கு மேல் தோல்வியுற்றவர்கள் இதில் பங்கேற்க முடியாது. இந்த சிறப்பு தேர்வுகள் வரும் ஜூன் 22 முதல் ஜூலை 2ம் வரை நடக்கும் என தெரிகிறது.

25ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்...

மாணவ, மாணவியர்கள் வரும் 25ம் தேதி தங்களின் பள்ளிகள் மூலம் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம். தனி தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களுக்கு சென்று தங்களது சான்றிதழ்களை வாங்கி கொள்ளலாம்.

விடைத்தாள் திருத்துதலில் சந்தேகம் இருக்கும் மாணவர்கள் கணிதம், இயற்பியல் மற்றம் உயிரியல் பாடங்களுக்கு விடைத்தாள் நகல் கேட்டு பெறலாம். இதற்கான விண்ணப்பம் வரும் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

ரூ. 275 செலுத்தி இந்த விண்ணப்பத்தை பெற்று கொள்பவர்கள் மட்டுமே மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடுக்கான விண்ணப்பம், விடைத்தாள் நகலுடன் இணைக்கப்பட்டிருக்கும்

No comments:

Post a Comment