Friday, April 10, 2009

தமிழ் நிறுவனத்திற்கு துபாயின் உயரிய கௌரவ மிக்க MRM விருது...

தமிழ் நிறுவனத்திற்கு துபாயின் உயரிய கௌரவமிக்க MRM விருது...
துபாயின் உயரிய கௌரவமிக்க "சேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம்" வியாபார விருது (Business Award), ரியல் எஸ்டேட் பிரிவுக்காக தமிழ் நிறுவனமான "ETA STAR PROPERTY DEVELOPER" நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
சென்ற வருடம் ரியல் எஸ்டேட் ஜாம்பாவனான "EMAAR" நிறுவனமே இந்த விருதை"TAMEER" மற்றும் "UNION PROPERTY" போன்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்ட போது இந்த வருடம் இந்த பிரிவின் விருதை ஒரே நிறுவனம் அதிலும் தமிழ் நிறுவனம் தட்டிச்சென்றது மேலும் சிறப்பு.


இன்று காலை துபாய் "மதீனத் ஜுமைரா" வில் நடந்த சிறப்பு மிக்க விழாவில்,
இந்த பெருமை மிக்க விருதை, அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், துபாயின் ஆட்சியாளருமான உயர்திரு. முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களிடமிருந்து ETA குழுமத்தின் தலைவர் "வியாபார விஞ்ஞானி" உயர்திரு.செய்யது சலாஹூதீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

சென்ற வருடம் கட்டுமானப் பிரிவில் "ETA ASCON" இந்த விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது என்றாலும், உலக பொருளாதார வீழ்ச்சி எனும் சுழற்காற்று வீசிவரும் இந்த வேளையில் இப்படி ஒரு பெருமைமிக்க சாதனை விருதை தட்டிச்செல்வது சாதாரண விசயமில்லை, அதை ஒரு தமிழ் நிறுவனம் சாதித்திருப்பது நாம் எல்லோரும் பெருமை படக்கூடிய விசயமே...

கடந்த முப்பது வருடங்களாக தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, வெளிநாட்டில் குறிப்பாக அமீரகத்தில் ' ஏ மதராசி என்று அலட்சியமாக அழைத்தவனெல்லாம் ஆப் மதராசி ஹை?! (வரி உபயம்:அண்ணாச்சி) என்று ஆச்சரியமாகக் கேட்க வைத்தற்கு காரணமான ஒரு பெருமை மிக்க நிறுவனமான ETA குழுமத்தின் கிரீடத்தில், இந்த விருது மேலும் ஒரு வைரமாக மிளிருமென்றால் அது மிகையாகாது.

Thursday, April 9, 2009

முத்துப்பேட்டை அப்துல் ர‌ஹ்மான் வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி வேட்பாள‌ராக‌ தேர்வு


வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி வேட்பாள‌ராக‌ அப்துல் ர‌ஹ்மான் தேர்வு
வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் க‌ட்சியின் வேட்பாளராக‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் உல‌க ஒருங்கிணைப்பாள‌ரும், அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் த‌லைவ‌ருமான‌ முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான் அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.
இத்த‌க‌வ‌ல் வியாழ‌க்கிழ‌மை இர‌வு இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாநில‌ த‌லைமை நிலைய‌மான‌ காயிதெமில்ல‌த் ம‌ன் ஜிலில் மாநில‌ த‌லைவ‌ர் முனீருல் மில்ல‌த் பேராசிரிய‌ர் கே.எம். காத‌ர் மொகிதீன் எம்.பி. த‌லைமையில் ந‌டைபெற்ற‌ அவ‌ச‌ர‌ செய‌ற்குழுக்கூட்ட‌த்தில் முடிவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.
மேலும் ச‌முதாய‌ வேண்டுகோளின்ப‌டி உத‌ய‌சூரிய‌ன் சின்ன‌த்தில் போட்டியிடுவ‌து என்றும் முடிவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.
முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான் ப‌ள்ளிக்க‌ல்வியை ஆக்கூர் ஓரிய‌ண்ட‌ல் உய‌ர்நிலைப்ப‌ள்ளியில் ப‌டித்தார். ப‌ள்ளிப்ப‌டிப்பின் போதே மாநில‌ அள‌விலான‌ பேச்சுப் போட்டிக‌ளில் வெற்றி பெற்றுள்ளார். பின்னர் ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரியில் க‌ல்லூரிப் ப‌டிப்பினைப் ப‌யின்றார்.
க‌ட‌ந்த‌ கால் நூற்றாண்டுக்கும் மேலாக‌ அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ரும் இவ‌ர் துபாய் இஸ்லாமிய‌ வ‌ங்கியின் த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌த்துறையில் உத‌வித் த‌லைவ‌ராக‌ இருந்து வ‌ருகிறார்.
துபாய் ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர்க‌ளில் ஒருவ‌ராக‌வும், ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி ப‌ழைய‌ மாண‌வ‌ர் ச‌ங்க‌ பொதுச்செய‌லாள‌ராக‌வும் இருந்து வ‌ருகிறார்.
அமீர‌க‌த்தில் ச‌முதாய‌ப் ப‌ணிக‌ளின் மூல‌ம் இந்திய‌ ம‌க்க‌ளுக்கு ப‌ல்வேறு சேவைக‌ளைச் செய்து வ‌ருகிறார். அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ந்தாலும் தாய‌க‌த்தில் ச‌மூக‌ந‌ல‌ப்ப‌ணி மேற்கொள்ள‌ வேண்டும் என்ற‌ ஆவ‌லைக் கொண்ட‌வ‌ர்.
இந்த‌ அவ‌ச‌ர செய‌ற்குழுவில் மாநில‌ பொதுச்செய‌லாள‌ர் டாக்ட‌ர் சைய‌த் ச‌த்தார், மாநில‌ நிர்வாகிக‌ள், அமீர‌க காயிதெமில்ல‌த் பேரவை பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.
அமீர‌க‌ப் பிர‌முக‌ர்க‌ள் வாழ்த்து
எம். அப்துல் ர‌ஹ்மான் தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ செய்திய‌றிந்து அமீரக‌த்தில் செய‌ல்ப‌ட்டு வ‌ரும் ப‌ல்வேறு அமைப்புக‌ளின் நிர்வாகிக‌ள் த‌ங்க‌ள‌து ம‌கிழ்ச்சியினையும், வாழ்த்தினையும் தெரிவித்துள்ள‌ன‌ர்.
அமெரிக்கா
அமெரிக்கா காயிதெமில்ல‌த் பேரவை அமைப்பாள‌ர் தோப்புத்துறை முஹ‌ம்ம‌து நூர்தீன், குவைத் காயிதெமில்ல‌த் பேர‌வை அமைப்பாள‌ர் டாக்ட‌ர் அன்வ‌ர் பாஷா, ச‌வுதி அரேபிய‌ காயிதெமில்ல‌த் பேரவை நிர்வாகிக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் த‌ங்க‌ள‌து வாழ்த்தினை வெளிப்ப‌டுத்தியுள்ளன‌ர்.
செய்தி : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

Wednesday, April 8, 2009

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் முக்கிய அறிவிப்பு


முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் முக்கிய அறிவிப்பு

Sunday, April 5, 2009

சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் முத்துப்பேட்டையில் ஓட்டலை சூறையாடிய 3 வாலிபர்கள் கைது

சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம்

முத்துப்பேட்டையில் ஓட்டலை சூறையாடிய 3 வாலிபர்கள் கைது

முத்துப்பேட்டையில், சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் ஓட்டலை அடித்து உடைத்து சூறையாடினர். இதுதொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

முத்துப்பேட்டை ஆசாத்நகரில் ஓட்டல் கடை நடத்தி வருபவர் முத்துமணி (வயது 38). நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு கன்னியா குறிச்சியைச்சேர்ந்த சுப்பிரமணியன் மகன் குமார் (38), மேலநத்தம் கலைச்செல்வன் மகன் சரவணன் (23), பெருக வாழ்ந்தான் வீரையா தேவர் மகன் குமார் (29) மற்றும் அவர்களின் நண்பர்கள் 12 பேர் சாப்பிட வந்தனர்.

இவர்கள் அனைவரும் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மது அருந்தி வந்துள்ளனர். அனைவரும் சாப்பிட்டு முடிந்தவுடன் முத்துமணி, சாப்பிட்டதற்கு பணம் கேட்டுள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த அவர்கள் கடையில் வேலைபார்த்த ஊழியர்களை தாக்கினர். மேலும், கடையில் இருந்த பர்னிச்சர் பொருட்களையும், பாத்திரங்களையும் அடித்து உடைத்து சூறையாடி னர்.

3 வாலிபர்கள் கைது

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசில் முத்துமணி புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சின்னசாமி வழக்குப்பதிவு செய்து குமார், சரவணன், மற்றொரு குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 12 பேரையும் வலைவீசி தேடி வருகின்றார்கள்.

Thursday, March 26, 2009

முத்துப்பேட்டை அப்துர் ரஹ்மான் பேச்சு மனித நேய பேரியக்கமே முஸ்லிம் லீக்


மனித நேய பேரியக்கமே முஸ்லிம் லீக் துபை அப்துர் ரஹ்மான் பேச்சு
சாதி மதம் வேறுபாடு பார்க்காமல் அனைவருக் காகவும் உழைக்கும் மனித நேய பேரியக்கமே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த தின பெருவிழா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 61ம் ஆண்டு துவக்க விழா,உலமாக்கள் நல வாரியம் அமைத்த தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா காஞ்சிபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தாம்பரத்தில் 20-03-2009 அன்று நடை பெற்றது.

இந்தக் கூட்டத்தில் காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் துபை. அப்துர் ரஹ்மான் உரையாற்றினார்

அப்போது அவர் குறிப் பிட்டதாவது:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்லிம் மக்களுக்காக மட்டுமல்லாமல் அனைத்து சமூக மக்களுக்கும் அரும் தொண்டாற்றி வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சேவையை உணர்ந்தவர்கள் அதனை வாழ்த்தி வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர். அது வளர பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைகளுக்காக பாடுபடும் அதே நேரத்தில் பிற சமுதாயத்தினரின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயல்படும் இயக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பெருமையை உலகம் முழுவதும் பரவலாக்கும் வகையிலேயே வெளிநாடுகளிலே வேலை பார்க்கும் எங்களைப் போன்றவர்கள் அங்கும் காயிதே மில்லத் பேரவை என்ற பெயரி லேயே முஸ்லிம் லீகின் பணிகளை செய்து கொண்டிருக்கின்றோம்.

முன் பின் தெரியாதவர்களுக்குக் கூட சாதி, மதம், மொழி, வேறுபாடு பார்க் காமல் அனைவருக்கும் சேவையாற்றும் மனித நேய பேரியக்கமாக முஸ்லிம் லீக் திகழ்ந்து வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்திலே நடந்த ஒரு உண்மை சம்பவம் முஸ்லிம் லீகின் மனித நேய செயல்களுக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

சில வாரங்களுக்கு முன்பாக துபையில் இருந்த எனக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. பேசியவர் இந்தியாவில் இருந்து பேசுவதாகவும் தனது பெயர் 'காந்த் என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது சகோதரி 'தேவி என்பவர் பணியாற்றி வந்ததாகவும் எதிர் பாராத வகையில் அங்கே அவர் இறந்து விட்டதாகவும் அவரது உடலினை பெற்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்க உதவும்படி எங்களிடம் கோரிக்கை வைத்தார்.

தான் பல வகையிலும் விசாரித்த வகையில் துபையில் காயிதே மில்லத் பேரவை என்ற அமைப்பு தான் எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாமல், சாதி, மத வேறு பாடில்லாமல் இந்திய மக்கள் அனைவருக்கும் சிறப்பான சேவை செய்து வருவதை கேள்வி பட்டதால் உங்களின் உதவியை நாடியுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்று சம்பந்தப் பட்டவரின் சகோதரியின் உடலினை பெற்று முறைப்படி செய்ய வேண்டியவற்றை செய்து இந்தியா விற்கு அனுப்பி வைத்தோம்.

இந்தியாவுக்கு வந்த அந்த சடலத்தினை பெற்றுக் கொண்ட அவர் மீண் டும் எங்களை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் கூறினார் நான் இவ்வளவு காலமாக இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் மிகவும் தவறான எண்ணம் கொண்டிருந்தேன். பல முறை இழித்தும் பழித்தும் கேவலமான முறையில் பேசியிருக்கிறேன். ஆனால், இப்பொழுது முஸ்லிம்களுடைய மனித நேய பண்பை ஜாதி மதம் பார்க்காமல் உதவும் பெரும் தன்மையை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டேன். இத்துனை நாட்களாக எனது மனதில் ஆழமாக பதிந்திருந்த முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வு என்னை விட்டு முற்றிலுமாக அகன்றுகொண்டிருக்கின்றது. உங்களுடைய இந்த மனிதநேய பணி வளர கடவுளை வேண்டிக் கொள்கின்றேன். என்பதாக மிகவும் உருக்கத்துடன் அவர் எங்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இத்தகைய மாண்புடைய மனிதநேயத்தை சிறு வயதிலிருந்தே எங்களுக்கு ஊட்டிய இயக்கம் முஸ்லிம் லீக்.

இது போன்ற அரிய பல காரியங்களை அனைத்து மக்களுக்காகவும் செய்து வரும் இயக்கம்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். இந்த இயக்கம் எங் கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் அமைதியும் சமாதானமும், நல்லிணக் கமும் வளரும். இந்த இயக் கம் நல்ல முறையில் வளர்ந்து அனைத்து மக்க ளுக்கும் பாடுபட அனைவரும் உழைக்க வேண்டும். அதுவே மனித நேயம் என்று சொல்லத் தகுந்த செயலாக இருக்க முடியும்.

இவ்வாறு காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் துபை. அப்துர் ரஹ்மான் பேசினார்