Friday, November 20, 2009

முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 30 இடங்களில் கண் சிகிச்சை முகாம்

முத்துப்பேட்டை ஒன்றியத்தில்30 இடங்களில் கண் சிகிச்சை முகாம்ஒன்றியக்குழுத் தலைவர் தகவல்

முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 30 இடங்களில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்படும் என்று ஒன்றியக்குழுத் தலைவர் தெரிவித்தார்.

ஆலோசனைக் கூட்டம்

முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 29 ஊராட்சிகளிலும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்துவது குறித்த ஆலோ சனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழுத் தலைவர் எம்.கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜுலியட் ஜெயசிந்தாள், பால கிருஷ்ணன், மாவட்ட பார்வை யிழப்பு தடுப்பு சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வரத ராஜன், கணக்கர் நாகலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ந.உ.சிவசாமி, தெட்சிணா மூர்த்தி மற்றும் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள், எழுத்தர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஒன்றியக்குழுத் தலைவர் எம்.கல்யாணசுந்தரம் பேசியதாவது:-

கண் சிகிச்சை முகாம்

முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்களுக்கு கண் மருத்துவ உதவியாளர்களைக் கொண்டு இலவச கண் பரிசோதனை செய்து கண்புரையால் உள்ளவர்களை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தையல் இல்லா கண் அறுவை சிகிச்சை செய்யப்படும்.

கண் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுவர வாகன வசதி, தங்குமிடம், உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

30 இடங்கள்

அதன்படி முத்துப்பேட்டை, கோவிலூர், மேலநம்மங்குறிச்சி, கீழநம்மங்குறிச்சி, தம்பிக்கோட்டை - கீழக்காடு, ஜாம்பு வானோடை, ஆலங்காடு, உப்பூர், மாங்குடி, மருதவனம், வங்கநகர், வடசங்கேந்தி, தோலி, ஆரியலூர், உதயமார்த் தாண்டபுரம், இடும்பாவனம், எடைïர், ஓவரூர், கள்ளிக்குடி, கற்பகநாதர்குளம், கீழப்பெருமழை, குன்னலூர், சங்கேந்தி, பாண்டி, பின்னத் தூர், மேலப் பெருமழை, விளாங்காடு, வேப்பஞ்சேரி, தில்லை விளாகம், தொண்டியக்காடு ஆகிய ஊர்களில் இலவச சிகிச்சை முகாம் நடக்கிறது.

எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.